

தமிழகத்தில் திமுக அரசின் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் மா. சுப்பிரமணியன்
சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு சிட்கோவின் சார்பில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலத்தை சென்னை மாநகர மேயராக இருந்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றம் செய்தாக குற்றச்சாட்டு எழுந்தது.
சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் அளித்த புகாரின் பேரில், போலி ஆவணம் தயாரித்தல், ஏமாற்றுதல், கூட்டு சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரின் மனைவி காஞ்சனா மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
2019ம் ஆண்டு இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
தன்மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இந்நிலையில், சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி வெங்கடவரதன் முன்பு இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருப்பதாக, மா.சுப்பிரமணியன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனவே, குற்றச்சாட்டு நடைமுறையை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
கூடுதல் கால அவகாசம் வழங்க முடியாது எனக் கூறிய அடுத்த விசாரணைக்குள் உச்ச நீதிமன்ற உத்தரவை பெறுமாற அறிவுறுத்தனார்.
இல்லையென்றால் ஜூலை 24 ம் தேதி மா.சுப்பிரமணியன் மற்றும் அவரின் மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு நடைமுறை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
==============