

MK Stalin Refuses Rahul Gandhi Phone Call Sonia Gandhi Book Launch
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியின் செல்போன் அழைப்பை ஏற்க மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
முறிந்து போன திமுக - காங்கிரஸ் கூட்டணி
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிரடி திருப்பமாக தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்க காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் ஆதரவு அளித்தன. முன்னதாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு தொடக்கத்தில் இருந்தே திமுகவிற்கும் காங்கிரஸிற்கும் இடையே சலசலப்பு நிலவி வந்தது.
தவெக - காங்கிரஸ் புதிய கூட்டணி
திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு முதலானவற்றில் தொடர்ந்து இழுபறி இருந்து வந்தது. இதையடுத்து சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்விஉயத் தழுவியதைத் தொடர்ந்து, காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி விஜய்யின் தவெக கட்சிக்கு ஆதரவளித்து தவெக - காங்கிரஸ் என்ற புதிய கூட்டணியை உருவாக்கிக் கொண்டது. தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சோனியாவின் புத்தக வெளீயீட்டு விழா
இந்நிலையில், நேற்று முன்தினம் (16-11-2026) டெல்லியில் நடைபெற்ற சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில், தமிழக முதல்வர் விஜய் உட்பட பிற மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர்களும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். இந்நிகழ்வில் முதல்வர் விஜய் முதல் வரிசையில் அமர்ந்திருந்ததும் அனைவரது கவனத்தையும் பெற்றிருந்தது.
ராகுல் காந்தியிடம் பேச மறுத்தாரா மு.க. ஸ்டாலின்?
இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றுமாறு மு.க.ஸ்டாலினுக்கு, ராகுல் காந்தி அழைப்பு விடுத்திருந்ததாகவும், ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சட்டமன்ற தேர்தல் விவகாரம், கூட்டணி முறிவு என இரு கட்சிக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பை மறுத்துவிட்டதாகவும் பேசப்படுகிறது.
ராகுலிடம் பேச முடியாது..ஆனால்?
இதுதொடர்பாக ராகுல் காந்தியின் அலுவலகத்தில் இருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு செல்போன் அழைப்பு சென்றதாகவும், அந்த அழைப்பில் சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக ராகுல்காந்தி தங்களை அழைக்க விரும்புகிறார் என்று கூறப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதற்கு மு.க.ஸ்டாலின் தற்போது வேறு பணிகள் இருப்பதாகவும் அதனால் ராகுலிடம் பேச முடியாது என்றதாகவும் மேலும் சோனியாவின் சுயசரிதை புத்தக வெளியீட்டு நிகழ்விற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ராகுலிடம் பேச மறுத்துள்ள நிகழ்வு தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஏற்கெனவே திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிந்துவிட்டாலும் தற்போது முழுமையாக கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
=======