சென்னையில் மோடி : தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை : தமிழிசை, அண்ணாமலை, வானதியும் பங்கேற்பு...

புதுவையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ மேற்கொண்ட பிறகு ,சென்னையில் முக்கிய பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர்
Modi's consultation in Chennai; consultation on election strategy,
Modi's consultation in Chennai; consultation on election strategy, google
1 min read

2026 தேர்தல்

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளுக்கும் கூட்டணி கட்சிகள் அதன் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் முடிவாகி உள்ளது ,அதன்படி பாஜக வேட்பாளரக்ளுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்

பாஜக வேட்பாளர்கள் பட்டியல்

வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மயிலாப்பூரில் தமிழிசை சௌந்தரராஜன், அவினாசியில் எல். முருகன், கோவை வடக்கில் வானதி சீனிவாசன், சாத்தூரில் நயினார் நாகேந்திரன், விளவங்கோடு தொகுதியில் எஸ். விஜயதாரணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வேட்பாளர் பட்டியலில் அறிவிக்கப்படவில்லை.

பாஜக மையக்குழுவுடன் ஆலோசனை

பிரதமர் மோடி புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொண்ட பின்னர் நேற்று இரவு சென்னையில் தங்கி பாஜக மையக்குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார்

பாஜக முக்கிய தலைவர்கள் பங்கேற்பு

இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எல். முருகன், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.

தேர்தல், பிரச்சாரம் ,வியூகம் தொடர்பாக ஆலோசனை

தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பணிகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுவதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது . அதேபோல 27 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களும் பிரதமரைச் சந்தித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் வாழ்த்து பெற உள்ளனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in