

சென்னை மெட்ரோ ரயில் சேவை
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பொதுமக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் நம்பகத்தன்மையான போக்குவரத்து வசதியை வழங்கி வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1,04,04,098 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்து இருப்பதாக, மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆக.14 - 4 லட்சம் பேர் பயணம்
அதிகபட்சமாக ஆகஸ்ட் 14 அன்று 4,01,607 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
ஆகஸ்டில் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 52,84,196 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
க்யூஆர் குறியீடு பயன்பாடு அதிகரிப்பு
வாட்ஸ்அப், Paytm, PhonePe, ONDC, சென்னை ஒன் செயலி மற்றும் பல்வேறு க்யூஆர் குறியீடு (QR Code) முறைகள் மூலமாகவும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
20% கட்டண தள்ளுபடி
டிஜிட்டல் முறைகள், க்யூஆர் குறியீடு மற்றும் சிங்கார சென்னை அட்டை மூலம் பயணம் செய்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது.
மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுண்டர்களில் வாங்கப்படும் ஒற்றைப் பயணத்துக்கான காகித QR பயணச் சீட்டுகளுக்கு (Single Journey Paper QR tickets) இந்தத் தள்ளுபடி கிடையாது என்று சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
பொதுமக்கள் ஒத்துழைப்பை அவசியம்
மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது.
=======