MLA பதவியை ராஜினாமா செய்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் : காலியாக உள்ள தொகுதிகள் 7 ஆக உயர்வு : விரைவில் மினி இடைத்தேர்தல்..

அதிமுகவில் இருந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
M.R. Vijayabhaskar resigns as MLA; constituency becomes vacant; by-election expected soon.
M.R. Vijayabhaskar resigns as MLA; constituency becomes vacant; by-election expected soon. google
1 min read

பதவியை ராஜினாமா செய்த எம்.ஆர் விஜயபாஸ்கர்

அதிமுக-வின் முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ராஜினாமா கடிதத்தை பேரவைத் தலைவரிடம் வழங்கினார்.

தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாம செய்து கடிதத்தை சட்டப்பேரவை தலைவர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து வழங்கியுள்ளார் .இதையடுத்து அவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் எனக் கூறப்படுகிறது.

அதிமுகவிலிருந்து விலகிய 6 பேர்

ஏற்கனவே அதிமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்யபாமா, இசக்கி சுப்பையா சி. விஜய்பாஸ்கர் ஆகியோர் , பேரவை தலைவரை சந்தித்து ராஜினாம கடிதத்தை வழங்கி இருந்த நிலையில்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-வது MLA-வாக பதவியை ராஜினாமா செய்ய உள்ளதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்த நிலையில் அதிமுகவில் இருந்து 6 பேர் தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாம செய்துள்ளனர்

அரசியல் ரீதியாக கவனம் பெறும் ராஜினாமா

கடந்த சில வாரங்களாக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணையும் நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இந்த முடிவு அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது.

விலகலுக்கான காரணம்

எம்.ஆர் விஜயபாஸ்கர் க்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்படாமல் இருந்த்தால் , அவர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது , இந்த காரணத்தாலே தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்

காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு

ஏற்கனவெ திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜினாமா செய்திருந்த நிலையில், அதிமுகவில் இருந்து 6 எம்எல்ஏல்க்கள் விலகினர். இந்த எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

காலியாக உள்ள தொகுதி : விரைவில் இடைத்தேர்தல்

காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை இதுவரை 7 ஆக உயர்ந்து இருக்கும் நிலையில், 6 மாதங்களுக்கும் இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

தவெகவில் இணைய வாய்ப்பு

ஏற்கனவே அதிமுகவில் இருந்து விலகிய அதிமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான் ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தவெகவில் இணைந்த நிலையில் , சி, விஜயபாஸ்கரும் , எம் .ஆர் விஜயபாஸ்கரும் தவெகவில் இணைவதற்கான வாய்ப்புக்ள இருப்பதாக கூறப்படுகிறது.

================

logo
Thamizh Alai
www.thamizhalai.in