

Naam Tamilar Katchi NTK Maanadu, held in Trichy tomorrow, candidates contesting in 234 constituencies introduce By Seeman : தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டியுடன், தேர்தலை மக்கள் சந்திப்பார்கள் எனத் தெரிகிறது.
திருச்சியில் நாம் தமிழர் மாநாடு
இந்தநிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு 2026 என்ற தலைப்பில் திருச்சியில் நாளை (21ம் தேதி) மாநாட்டை கூட்டி இருக்கிறார்.
சீமான் போட்டியிடும் தொகுதி?
இந்த மாநாட்டில் தான் போட்டியிடும் தொகுதியையும் அறிவிக்க உள்ளார் சீமான். 2016ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வரும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டு வருகிறது.
தனித்தே போட்டியிடும் நாம் தமிழர்
2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 1.07 சதவீத வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி, 2019 நாடாளுமன்ற தேர்தலில் 3.9 சதவீத வாக்குகளை பெற்றது.
தொடர்ந்து 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 6.58 ஆக உயர்ந்த அக்கட்சியின் வாக்கு சதவீதம், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 8.2 ஆக அதிகரித்தது. இந்த நிலையில், வரும் சட்டசபை தேர்தலையும் நாம் தமிழர் கட்சி தனித்தே எதிர்கொள்ள இருக்கிறது.
234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிமுகம்
பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ள சீமான், திருச்சியில் நாளை நடைபெறும் கட்சி மாநாட்டில், 234 வேட்பாளர்களையும் மேடையேற்றுகிறார்.
எந்தத் தொகுதியில் சீமான் போட்டி?
தான் போட்டியிடும் தொகுதியையும் சீமான் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சியின் மாநாடு தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். மாநாட்டில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படுவார்கள்." என சீமான் தெரிவித்துள்ளார்.
கடன் வாங்கி திட்டங்கள் நிறைவேற்றம்
தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் கடன் வாங்கி நிறைவேற்றப்பட்டவை. இந்த மாதிரியான ஆட்சி முறையை தான் எதிர்பார்க்கிறீர்களா? 5,000 ரூபாயை நாங்க கேட்கவில்லையே.
இதனை எதை வைத்து கட்டுவீங்க? யாரு காசு இது? அரசு மருத்துவமனைகள், அரசு பள்ளிகள், கல்லூரிகளில் தரம் இல்லை, என்று சீமான் குற்றம்சாட்டினார்.
யார்யார்? எந்தெந்த தொகுதியில் போட்டி
பல்வேறு தொகுதிகளுக்கு நாம் தமிழர் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், இளைஞர் பாசறை பொறுப்பாளர் எ.சரண்யா எழும்பூர் தொகுதியிலும், சுற்றுச்சூழல் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா தாயுமானவன் ஆர்.கே.நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் மு.களஞ்சியம் ஆயிரம் விளக்கு தொகுதியிலும், வழக்கறிஞர் பாசறை மாநில செயலாளர் சி.சங்கர் அண்ணாநகர் தொகுதியிலும், இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பெனஷான் ஷெரிப் துறைமுகம் தொகுதியிலும், தகவல் தொழில்நுட்ப பாசறை பொறுப்பாளர் கீர்த்தனா வேளச்சேரியிலும் போட்டியிடுவார்கள் எனத் தெரிகிறது.
===============