

Nainar Nagendran About Sengottaiyan TVK Joining : அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, அக்கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
கவுன்சிலர் கூட இல்லாத தவெக
இந்தநிலையில், மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “த.வெ.க.வுக்கு ஒரு கவுன்சிலர் கூட கிடையாது. துரியோதனன் போல சேராத இடம் சேர்ந்துள்ளார் செங்கோட்டையன். அவருக்குத் தோல்விதான் கிடைக்கும்”.
செங்கோட்டையன் கருத்து வருத்தம்
விஜய் தலைமையில் சிறப்பான ஆட்சி அமையும் எனக் கூறும் செங்கோட்டையன், ஏற்கனவே அதிமுக அமைச்சரவையில் இருந்து இருக்கிறார். அப்படி என்றால், அப்போது நடைபெற்றது நல்ல ஆட்சி இல்லை என அவரால் கூற முடியுமா? அவரது கருத்து வருத்தம் அளிக்கிறது.
2026 தேர்தலில் வெற்றி நிச்சயம்
“கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு பாஜக காரணம் என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாது. இப்போது அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் வெறும் கண்துடைப்புதான்.2026 தேர்தலில் உறுதியாக தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும். இதில் மாற்றமே இருக்காது.
தினகரன் - அண்ணாமலை
டிடிவி தினகரன் எங்கள் கூட்டணியை விட்டு எப்போதோ வெளியேறி விட்டார். இனிமேல் அவரை மீண்டும் எப்படி அழைக்க முடியும்? அண்ணாமலை உறுதியாக தனிக்கட்சி துவங்க மாட்டார். அவ்வாறு வரும் தகவல்களும் உண்மை கிடையாது.
எடப்பாடி தலைமையில் தேர்தல்
என்ன பிரச்சினை வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் நாங்கள் தேர்தலை சந்திப்போம். அதில் உறுதியாக இருக்கிறோம்.”
மக்களை குழப்பும் திமுக
எஸ்ஐஆர்- ஐ வைத்து திமுகவினர் மக்களை குழப்பி, அவர்கள் தமது வேலைகளை பார்த்து வருகின்றனர். பீஹாரில் 65 லட்சம் ஓட்டுக்கள் நீக்கப்பட்டது போல், தமிழகத்தில் சுமார் 75 லட்சம் ஓட்டுக்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என தெரிய வருகிறது. இதில் 2002க்கு பின்னர் இறந்தவர்களின் ஓட்டுக்களே இருக்கும்.
முதல்வர் தொகுதியில் 10,000 வாக்குகள்
முதல்வர் ஸ்டாலின் நின்று வெற்றி பெற்ற கொளத்தூர் தொகுதியில் மட்டும் 10 ஆயிரம் ஓட்டுக்கள் இறந்தவர்களின் பெயரில் உள்ளது. அதனை நீக்குவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்” இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேட்டியளித்தார்.
===========