”ADMK கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா BJP" : புதிய அரசு அமைப்பதில் இணைய மாட்டோம் : நயினார் திட்டவட்டம்!

தமிழ்நாட்டில் புதிய அரசை அமைப்பதற்கான எந்தவொரு முயற்சியிலும் பாஜக இணையாது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Nainar Nagendran said that BJP will not join any effort to form a new government in Tamil Nadu
Nainar Nagendran said that BJP will not join any effort to form a new government in Tamil Nadugoogle
1 min read

ஒரு இடத்தில் பாஜக வெற்றி

அதிமுக கூட்டணியில் இடம்பெற்று 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. தமிழகத்தில் அக்கட்சிக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று 4 தொகுதிகளில் பாஜக வென்று இருந்தது. இந்தமுறை அக்கட்சியின் வாக்கு வங்கியும் சரிந்துள்ளது.

அதிமுக-திமுக கூட்டணி ஆட்சி?

தவேக ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில், அதிமுக-திமுக கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதை இரண்டு கட்சிகளின் முக்கிய தலைவர்கள் இதுவரை திட்டவட்டமாக மறுக்கவில்லை.

மழுப்பலாகவே அவர்கள் பதிலளித்து வருவது சந்தேகத்தை அதிகரிக்க செய்திருக்கிறது.

அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தால், அதை திமுக ஏற்குமா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. இந்தச் சூழலில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலக இருப்பதாக தெரிகிறது.

தமிழக பாஜக அறிக்கை

இது சூசகமாக தெரிவிக்கும் வகையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

”தமிழ்நாட்டு மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சி அதே நோக்கத்துடன் சட்டமன்ற தேர்தலிலும் களம் கண்டது.

மக்கள் எங்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை

இருப்பினும், தேர்தல் முடிவுகளை கட்சியானது, மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறது. மேலும், தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கான எந்தவொரு வாய்ப்பினையும் அதிகாரத்தையும் மக்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த தேர்தலில் வழங்கவில்லை என்று கருதுகிறோம்

மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்

தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தையும், தேர்தல் முடிவுகளையும் நாங்கள் உளமார மதிக்கிறோம். எனவே தமிழக பாரதிய ஜனதா கட்சியானது, தமிழ்நாட்டில் புதிய அரசை அமைப்பதற்கான எந்தவொரு முயற்சியிலும் தன்னை இணைத்துக்கொள்ள விரும்பவில்லை.

ஆட்சி அமைக்கும் முயற்சியில் இணைய போவதில்லை

ஆட்சி அமைக்கும் எவ்வித முயற்சியிலும் கட்சியானது எவ்வித நேரடிப் பங்களிப்பையும் மேற்கொள்ள விரும்பவில்லை. மேலும், ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எந்தவொரு கட்சிக்கும் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்பதையும் மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், அதிமுக-திமுக கூட்டணி ஆட்சி என்றால், அதற்கு பாஜக ஆதரவு தராது என்று தெரிகிறது. எனவே, அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

=========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in