மதுரை முருக பக்தர்கள் மாநாடு : நயினார் நாகேந்திரன் அழைப்பு

மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் கட்சி பேதமின்றி அனைவரும் பங்கேற்க நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
மதுரை முருக பக்தர்கள் மாநாடு : நயினார் நாகேந்திரன் அழைப்பு
https://x.com/BJP4TamilNad
1 min read

இந்து முன்னணி சார்பில் மதுரையில் நாளை முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது.

5 லட்சத்திற்கும் அதிகமானோர் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விழாவுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், முருகன் மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

விரும்பும் தெய்வங்களை வழிபடுவது அனைவரின் ஜனநாயக உரிமை, கட்சி பேதமின்றி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே, உலகெங்கிலும் உள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆன்மீக நோக்கத்திற்காக மட்டுமே முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுவதாகவும் நயினார் நாகேந்திரன் சுட்டிக் காட்டி உள்ளார்.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in