Annamalai : ”அண்ணாமலையின் அடுத்த மூவ்!” : ராஜினாமாவை ஏற்க தலைமை மறுப்பு? : டெல்லி விரைந்த நயினார்...

அண்ணாமலை கொடுத்த ராஜினாமா கடிதத்தை டெல்லி தேசியத் தலைமை ஏற்க மறுத்து விட்டதாகவும், பேச்சுவார்த்தை நடத்த நயினார் நாகேந்திரன் டெல்லி அழைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
National leadership refused to accept the resignation letter given by Annamalai,  Nainar Nagendran went DelhiI
National leadership refused to accept the resignation letter given by Annamalai, Nainar Nagendran went DelhiIgoogle
1 min read

பாஜகவில் அண்ணாமலை

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கே. அண்ணாமலை, காவல் துறையிலிருந்து விலகி அரசியலில் இணைந்தார். 2020 பாரதிய ஜனதா கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்த அவர், தமிழக பாஜக துணைத் தலைவரானார் பதவிவகித்தார்.

பாஜக தலைவராக அண்ணாமலை

ஜூலை 2021ம் ஆண்டு தமிழக பாஜகவின் தலைவராக பொறுப்பேற்றார். அவரது பேச்சு, விரைவான செயல்பாடுகள் மிக விரைவாக இளைஞர்களை கவர்ந்தது. குறிப்பாக தமிழக பாஜக அண்ணாமலை தலைமையில் வளர்ச்சி கண்டது.

பாஜக வாக்கு 11%

அண்ணாமலை தலைமையில் 2024 லோக்சபா தேர்தலை பாஜக தனி அணி அமைத்து எதிர்கொண்டது. இதில் வெற்றி என்பது கிடைக்கா விட்டாலும், தமிழக பாஜகவின் வாக்கு 11 சதவீதமாக உயர்ந்தது.

நயினார் நாகேந்திரன் தலைவரானார்

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று விரும்பிய பாஜக தேசிய தலைவர்கள், அதற்கு வசதியாக 2025ம் ஆண்டு, அண்ணாமலையை தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்யச் சொல்லிவிட்டு, நயினார் நாகேந்திரனை தலைவராக்கினார்கள்.

பாஜக படுதோல்வி

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து, 28 இடங்களில் போட்டியிட்ட பாஜக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. தேர்தலில் பாஜகவுக்கு 3 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தது. தேர்தலில் போட்டியிட விரும்பாத அண்ணாமலை, பிரசாரத்தில் மட்டும் ஈடுபட்டார்

தமிழக அரசியலில் மாற்றம்

தமிழக அரசியலில் இளைஞர்களால் பெரும் அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், பாஜகவில் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று அண்ணாமலை கருதுவதாக கூறப்படுகிறது.

துடிப்பான அரசியலை சுதந்திரமாக முன்னெடுக்க தனிக்கட்சி தொடங்குவதே வழி என திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

தனிவழியில் அண்ணாமலை

அவருக்கு ரஜினிகாந்தின் முழு ஆதரவு இருப்பதாகவும், அரசியலில் கால்பதிக்க முடியாத சூப்பர்ஸ்டார், தனது ரசிகர்களை கொண்டு அண்ணாமலையை கட்டமைக்க விரும்புவதாகவும் தெரிகிறது. மக்கள் சக்தி இயக்கம் என்ற பெயரில் தனிக்கட்சி அண்ணாமலை தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

ராஜினாமா கடிதம்

இந்தசூழலில், டெல்லி சென்ற அண்ணாமலை உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினைச் சந்தித்துப் பேசினார். அப்போது, பாஜகவில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சி தலைவரிடம் கொடுத்தாக தகவல் வெளியானது.

டெல்லி விரைந்த நயினார்

ஆனால், பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகுவதை விரும்பாத தேசியத் தலைவர்கள், நயினார் நாகேந்திரனை டெல்லிக்கு அழைத்து இருக்கிறார்கள்.

அண்ணாமலையை சமாதானம் செய்யும் முயற்சியில் அமித் ஷா ஈடுபட்டு வருவதாகவும், நயினார்-அண்ணாமலையுடம் இன்று பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தெரிகிறது.

அண்ணாமலையின் அடுத்த மூவ்?

தேசிய தலைவர்களின் கோரிக்கையை ஏற்று பாஜகவில் அண்ணாமலை தொடருவாரா? அல்லது தனிக்கட்சி முடிவில் உறுதியாக நின்று வெளியேறுவாரா என்ற கேள்விகளுக்கு இன்று மாலைக்குள் விடை கிடைக்கும்.

==================================

logo
Thamizh Alai
www.thamizhalai.in