

GST Reforms Growth in Tamil Nadu : ஜி.எஸ்.டி. என்பது இந்தியாவின் பொருளாதார ஏற்ற தாழ்வுகளில் ஒரு முக்கிய பங்கு வகுக்கிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள பல்துறைகளில் இதன் வெளிப்பாடு இருந்து கொண்டிருக்கிறது. இதனால், பல்வேறு பொருட்களின் விலை குறைந்து உள்ள நிலையில் இதன்மூலம் தமிழகத்திற்கு என்னென்ன நன்மைகள் கிடைத்து இருக்கிறது என்பதனை மத்திய அரசு பட்டியலிட்டு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஜவுளித்துறை :
அதன்படி இந்தியாவின் ஜவுளித்துறையில் அதாவது, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கோடிக்கணக்கான மக்கள் இதன்மூலம் வாழ்வாதாரம் பெற்றுள்ளனர். "இந்தியாவின் பின்னலாடை தலைநகர்" என்று அழைக்கப்படும் திருப்பூரில் மட்டும் 10 லட்சத்திற்கு மேற்பட்டோர் இதன்மூலம் பயன் அடையும் நிலையில், இந்தியாவின் பின்னலாடை துணி ஏற்றுமதியின் 90 சதவீத பங்களிப்பும், சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு இங்கிருந்தே வருகிறது. குறைந்த மதிப்புள்ள ஆடைகள், எம்பிராய்டரி மற்றும் அணிகலன்களுக்கு ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 5 ஆகக் குறைக்கப்பட்டதால், உற்பத்திச் செலவு 6 முதல் 11 சதவீதம் வரை குறையும் என்று தகவல் வெளிவந்துள்ளது.
தமிழகத்தின் பட்டு உற்பத்தி :
இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பட்டு உற்பத்தி, அதன் ஏற்றுமதி இறக்குமதியும் தமிழக பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகித்து வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் பட்டு என்றால் அதன் பெயர் உலகப்புகழ் பெற்ற பட்டில் ஒன்றாகும். அதன்படி காஞ்சிபுரத்தில் வசிக்கும் அங்குள்ள நெசவாளர்கள், பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் இதன்மீது தான். இந்த பட்டுக்கான தேவையான வரி, ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டதால், மூலப்பொருள் செலவு 7 சதவீதம் குறையும். அதனால் இறுதி பட்டு விலையும் 2 முதல் 4 சதவீதம் வரை குறையும். கைத்தறிப் பொருட்கள்:- ஈரோட்டின் பவானி ஜமுக்காளம், மதுரையின் சுங்குடி போன்ற புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் 6 சதவீதம் வரை மலிவாக இருக்கும் நிலையில் இவை உள்நாட்டுச் சந்தையில் அதிகமாக விற்பனையாகுவும் ஏற்றுமதிக்கும் அதிக வாய்ப்பு உண்டு என தெரியவந்துள்ளது.
தமிழகத்தின் வெண்கலச்சிலைகள்
வெண்கலச் சிலைகள்:- குறிப்பாக தமிழகத்தில் உள்ள தஞ்சை மாவட்டத்தில் சுமார் 1,200 கைவினைஞர்கள் இழந்த மெழுகு வார்ப்பு முறையில் சிலைகள் உருவாக்குகின்றனர். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.20 முதல் 30 கோடி மதிப்பிற்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைந்ததால் விலையும் 6 சதவீதம் குறையும்.
நாகர்கோவில் நகை :
நாகர்கோவில் கோவில் நகை:- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோவில் நகை செய்யும் தொழிலில் சுமார் 500 கைவினைக்குடும்பங்கள் ஈடுபட்டு தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த நகை12 சதவீதத்தில் இருந்து 5 சதவீத குறைவால் விலை குறையும். பித்தளை, கல், மர கைவினை பொருட்கள்: தஞ்சாவூர், கும்பகோணம், மாமல்லபுரம் போன்ற இடங்களில் உள்ள சிற்பிகள் உற்பத்தி செய்யும் பித்தளை, கல், மர கைவினை பொருட்கள் 6 முதல் 7 சதவீதம் வரை குறையும். சுற்றுலா சந்தையிலும், ஆன்லைன் விற்பனையிலும் அதிக ஆதாயம் உண்டு எனவும் கூறலாம்.
பாராம்பரிய பொம்மைகள் உற்பத்தியில் ஜி.எஸ்.டி
இதைப்போன்று தமிழகத்தில் பாரம்பரிய பொம்மைகள் செய்யும் தொழிலில் பெண்கள் அதிகமாக ஈடுபடுத்தப்படும் நிலையில், ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 5 ஆக குறைந்ததால் தென்னை பாய், கயிறு, டெக்ஸ்டைல் போன்றவை 6 முதல் 7 சதவீதம் மலிவாகிறது. உள்நாட்டு, ஏற்றுமதி சந்தையில் போட்டித்திறன் உயரும். ஆவின்:- பால் பொருட்கள் பன்னீர், வெண்ணெய் போன்றவை ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதம் குறைந்ததால் அதன் விலையும் 4 முதல் 11 சதவீதம் வரை குறைந்து இருக்கிறது. ஆவினில் தினசரி 37 லட்சம் லிட்டர் பால், 5 லட்சம் விவசாயிகளிடமிருந்து வாங்கப்படுகிறது. ஜி.எஸ்.டி. குறைவால் ஆவின் நெட்வொர்க் வலுவடையும் என்றும் கூறப்படுகிறது.
முறுக்கில் ஜி.எஸ்.டி விகிதம்
இதில் பின்வருமாறு, மணப்பாறை முறுக்கு: திருச்சி மாவட்டத்தின் மணப்பாறை முறுக்கு புவிசார் பெற்றது. இந்த சிற்றுண்டி மூலம் 3 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். அதன் விலை 6 சதவீதம் மலிவாகி இருக்கிறது. மீன்பிடித்துறை:- தமிழகத்தின் கடலோர 14 மாவட்டங்களில் 10.48 லட்சம் மீனவர்கள் வாழ்கின்றனர். மீன், இறால், கடல் உணவுகளுக்கு ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 5 ஆக குறைக்கப்பட்டதால், விலை 7 சதவீதம் மலிவாகி இருக்கிறது. அதனால் தூத்துக்குடி, நாகப்பட்டினம், ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்கள் அதிக நன்மை பெறும். நோட் புத்தகம்:- சிவகாசி, பெரம்பூர் ஆகிய இடங்களில் அச்சு, ஸ்டேஷனரி தொழில் வலுவாக உள்ளது. நோட் புத்தகம், மற்றும் ஸ்டேஷனரி ஜி.எஸ்.டி. குறைவால் வியாபாரம் அதிகரிக்கும்.
இதில் எலெக்ட்ரானிக்ஸ்:- ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் எலெக்ட்ரானிக்ஸ் தொழில் மையங்கள் உள்ளன. டிவி, மானிட்டர் 28 சதவீதத்தில் இருந்து18 சதவீதமாக குறைந்து இருப்பதால் உற்பத்தி அதிகரிக்கும். இதைத்தொடர்ந்து டிரோன் நிறுவனங்கள் இருக்கும் இடங்களான சென்னை, ஓசூர், கோவை ஆகிய இடங்களில் டிரோன் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. ஜி.எஸ்.டி. 18, 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் குறைந்ததால் விலை 18 சதவீதம் குறைந்து உற்பத்தி அதிகரிக்கிறது. ஆட்டோமொபைல்:- கடந்த 2023-ல் இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தியில் 40 சதவீத பங்கு வகித்த தமிழகம், 22 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளது. ஜி.எஸ்.டி. 28-ல் இருந்து 18 சதவீதம் குறைவதால் வாகன விலை 8 சதவீதம் குறையும்.
ஜி.எஸ்.டியின் பாதுகாப்பு முறைகள்
இதில் பாதுகாப்பு உற்பத்தி மையங்களின் பங்கு தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது,அதன்படி சென்னை ஆவடி, கோவை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் பாதுகாப்புத் தொழில் உற்பத்தி மையங்கள்உள்ளன.இந்நிலையில், ஏவுகணைகள், போக்குவரத்து விமானங்கள், சிமுலேட்டர்கள் ஆகியவை இப்போது பூஜ்ஜிய ஜி.எஸ்.டி. என்பதால் விலைகுறைந்து உற்பத்தி அதிகரிக்கிறது. ரெயில் பெட்டிகள்:- சென்னை ஐ.சி.எப். உலகின் மிகப்பெரிய ரெயில் பெட்டி உற்பத்தியாளர். 8,200 பேர் பணிபுரிகின்றனர். ஜி.எஸ்.டி. 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் குறைவால், உற்பத்தி செலவு 5 சதவீதம் மிச்சமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : GST 2.0: இல்லங்களில் மகிழ்ச்சி, பணப்புழக்கம்: அமித் ஷா பெருமிதம்
பொருளாதாக நிபுணர்களின் கருத்து
இதன்மூலம் தற்போதைய தமிழகத்தின் முக்கிய பொருளாதாரா வளர்ச்சியின் பங்கு என்னவென்று தெரிய வரும் நிலையில், இதன் நன்மை மற்றும் தீமைகள் அறிந்து, பொருளாதார வளர்ச்சியில் ஈடுபட வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் பலரும் தங்களது கருத்துகள் மற்றும் விமர்சனங்களை சமூக வலைதளங்களில் காணொளியாகவும், கருத்துக்களாகவும் பதிவிட்டு வருகின்றனர்.