

அதிமுகவின் சக்தி வாய்ந்த தலைவர்
OPS Will Join DMK or TVK? : முன்னாள் ஜெயலலிதா காலத்தில் சக்தி வாய்ந்த நபராக வலம் வந்தவர் ஓ.பன்னீர்செல்வம். மூன்று முறை முதல்வர் பதவி இவரை தேடி வர, அந்த பொறுப்பினை ஏற்றவர்.
தமிழக அரசியலில் முக்கிய நபர்களில் ஒருவராக கருதப்படும் இவருக்கு, முக்குலத்தோர் வாக்குகள் கணிசமாக இருக்கின்றன.
எடப்பாடியுடன் ஓபிஎஸ் மோதல்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனான மோதலுக்கு பிறகு, கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். அதிமுக உரிமை மீட்பு குழு என்ற பெயரில் மீண்டும் கட்சியில் இணைய அவர் எடுத்த முயற்சிகள், விழலுக்கு இறைத்த நீராக வீணாகின.
அதிமுக கதவு மூடல்
அதிமுக கதவு இதுவரை திறக்காத நிலையில், திமுக பக்கம் போவதா? தவெகவிற்கு செல்வதா? தனிக்கட்சி தொடங்கி கூட்டணி அமைப்பதா என்று முடிவு எடுக்க முடியாத நிலையில் தவிக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.
தவிக்கும் ஓ. பன்னீர்செல்வம்
தினகரனையும் ஏற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, சசிகலா, ஓ பன்னீர்செல்வத்திற்கு இடமில்லை என்பதில் உறுதியுடன் நிற்கிறார். இந்த விவகாரத்தில் பாஜக சார்பில் எடுக்கப்பட்ட முயற்சிகளும் தோல்வியில் தான் முடிந்தன.
தை பிறந்தால் வழி பிறக்குமா?
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்த ஓ. பன்னீர்செல்வத்திற்கு இதுவரை அதிமுக எந்த சிக்னலும் கொடுக்கவில்லை.
எந்தப் பக்கம் போவது?
திமுகவிற்கு சென்றால், அதிமுகவை விமர்சிக்க வேண்டி இருக்கும், தவெகவுக்கு சென்றால், தனக்கு எத்தகைய பொறுப்பு கிடைக்கும் என்ற குழப்பம் ஓ. பன்னீர்செல்வத்திற்கு உள்ளது.
எல்லாரும் நன்றாக இருக்கணும்
இந்தநிலையில், சென்னையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ. பன்னீர்செல்வம், "அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்து வந்துள்ளேன்.
தை முடிய 9 நாட்கள்
தை மாதம் முடிய இன்னும் ஒன்பது நாட்கள் உள்ளன. அதற்குள் ஒரு நல்ல முடிவை எடுப்பேன்," என்றார்.
தேர்தலுக்கு மூன்று மாதங்கள் இருக்கு
"சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. உங்கள் அனைவரிடமும் தெரிவித்துவிட்டுத்தான் முடிவை அறிவிப்பேன்"என்று ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
எந்த ஓபிஎஸ்-ஐ கேட்கிறீர்கள்?
புதிய கட்சியை தொடங்க வாய்ப்பு உள்ளதா அல்லது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவீர்களா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "எந்த ஓபிஎஸ்-ஐ நீங்கள் கேட்கிறீர்கள்?" என சிரித்து கொண்டே பதில் அளித்தார்.
======