
வடபழனி முருகன் கோவில் :
Odhuvar Training School Classes Admission 2025 : முருகன் கோவில்களில் தொன்மையான தென்பழனிக்கு நிகராக சென்னை வடபழனியில் அமைந்துள்ள முருகன் கோயில்(Vadapalani Murugan Temple) புகழ்பெற்று விளங்குகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து முருகப் பெருமானை தரிசித்து செல்கின்றனர்.
வேண்டுதலை நிறைவேற்றும் தலம் :
விழாக்காலங்களில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து, அலகு குத்தி வேண்டுதல் நிறைவேற்றும் தலமாகவும் வடபழனி திகழ்கிறது. அறநிலையத்துறை(HRCE) கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், துணை ஆணையர், செயல் அலுவலர் நிலையிலும், தக்காராலும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
பகுதி நேரமாக ஓதுவார் பயிற்சி 2025 :
இந்து சமய அறநிலையத்துறையின் இந்த நிதியாண்டுக்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு படி, திருமுறைகளை குறைவின்றி ஓதிட ஏதுவாக இக்கோயிலில் புதியதாக ஓதுவார் பயிற்சிப் பள்ளி(Odhuvar Training School Part Time) பகுதி நேர வகுப்பாக தொடங்கப்படுகிறது.
காலை, மாலையில் பயிற்சி வகுப்புகள் :
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ ஓதுவார் பயிற்சி பள்ளியில் பயிற்சி 2025 காலம் நான்கு ஆண்டுகள்(Odhuvar Training School Timing). பகுதி நேர வகுப்புகள் காலை 6 மணி முதல் 8 மணி வரை அல்லது இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடத்தப்பட உள்ளது.
10ம் வகுப்பு தேர்ச்சி போதும் :
வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் முழுநேர வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இந்த ஓதுவார் பயிற்சிப் பள்ளியில்(Odhuvar Training School Qualification Age) சேர விரும்பும் மாணவ, மாணவியருக்கு 14 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை :
ஓதுவார் பயிற்சி(Odhuvar Training School Scholarship) பெற விரும்புவோர் இந்து மதத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். சமயக் கோட்பாடுகளை கடைபிடிப்பவர்களாக இருக்க வேண்டும். இந்த பயிற்சி வகுப்பில் படிப்பவர்களுக்கு ஒவ்வொரு மாதமும், ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். பெற்றோர், பாதுகாவலர் ஆகியோரை கொண்டு உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டும்.
இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
ஓதுவார் பயிற்சியில்(Odhuva School Application 2025) சேர விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானோர் வடபழனி முருகன் கோயிலில் நேரிலோ அல்லது இந்து சமய அறநிலையத்துறையின் www.tnhrce.gov.in மற்றும் www.vadapalaniandavar.hrce.tn.gov.in என்ற இணையதளத்திலோ விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
அக்.13ம் தேதி கடைசி நாள் :
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் அக்டோபர் 13ம் தேதிக்குள் துணை ஆணையர்/ செயல் அலுவலர், வடபழனி முருகன் கோயில், வடபழனி, சென்னை-600 026 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
=======