தகிக்கும் கோடை வெப்பம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா? : அதிகாரிகள் விளக்கம்!

கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
Officials explained whether there is a possibility of a drinking water shortage in Chennai as summer heat raising
Officials explained whether there is a possibility of a drinking water shortage in Chennai as summer heat raisinggoogle
1 min read

சென்னை குடிநீர் ஏரிகள்

சென்னைக்கு குடிநீர் வழங்க முக்கிய ஆதாரங்களாக இருப்பவை 5 ஏரிகள். பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல், கண்ணகோட்டை ஆகிய ஐந்து ஏரிகளின் மொத்த கொள்ளளவு சுமார் 11,757 மில்லியன் கன அடி ஆகும்.

ஏரிகளில் 67% நீர்இருப்பு

இந்த 5 ஏரிகளிலும் தற்போது 7,919 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. அதாவது மொத்த கொள்ளளவில் சுமார் 67 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது.

சென்னைக்கு மாதம் 1 டிஎம்சி தண்ணீர்

தற்போது குடிநீர் ஏரிகளில் சுமார் 9 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ள நிலையில், வழக்கமாக சென்னை நகரில் ஒரு மாதத்திற்கு 1 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும்.

கொளுத்தும் கோடை வெயில்

கொளுத்தும் கோடை வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வவந்தாலும், இந்த ஆண்டு பஞ்சம் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடிநீர் தட்டுப்பாடு வராது

ஏரிகளில் நீர்மட்டம் சீராக இருப்பதால் கோடை முழுவதும் சென்னைக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படும். வெயில் காரணமாக ஏரிகளின் நீர்மட்டம் சற்று சரிந்தாலும், தட்டுப்பாடு ஏற்படும் அளவுக்கு குறையவில்லை.

தற்போதைய நிலவரப்படி கையிருப்பில் தண்ணீர் கோடையை சமாளிக்க போதுமானது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்

இதுதவிர சென்னையில் செயல்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் மூன்று சுத்திகரிப்பு நிலையங்களின் மூலமாகவும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

எனவே இந்த ஆண்டு கோடைகாலத்தில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

============

logo
Thamizh Alai
www.thamizhalai.in