

தமிழக சட்டமன்ற தேர்தல்
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வரலாற்றில் இல்லாத வகையில் 85.15 சதவீத வாக்குகள் பதிவான.
மே.4ல் தேதி - வாக்கு எண்ணிக்கை
இந்நிலையில் நாளை மறுதினம் மே 4-ம் தேதி 62 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
ஒரு லட்சம் போலீசார் குவிப்பு
வாக்கு எண்ணும் மையங்களில் ஏதேனும் அசம்பாவிதங்கள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சென்னையில் 20,000 போலீசார்
சென்னையில் மட்டும் 20 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் பதிவான வாக்குகள் மூன்று மையங்களில் எண்ணப்படுகின்றன.
நான்கு அடுக்கு பாதுகாப்பு
வாக்கு எண்ணும் மையங்களில் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு படை, ஆயுதப்படை மற்றும் உள்ளூர் போலீசார் என 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 4-ல் மோதல் மற்றும் அசம்பாவிதங்கள் நடப்பதைத் தடுக்க அரசியல் கட்சி அலுவலகங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்கள் என தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட உள்ளனர்.
பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை
வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்களில் 24 மணி நேர சிசிடிவி கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடங்கப்பட உள்ளது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். பின்னர் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, படிப்படியாக முன்னணி நிலவரம், பின்னர் முடிவுகள் அறிவிக்கப்படும்.
==========