பேருந்து, புறநகர், மெட்ரோவுக்கு ஒரே டிக்கெட்-ஜூலையில் அறிமுகம்

சென்னையில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோர், ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் வசதி அறிமுகமாகிறது.
பேருந்து, புறநகர், மெட்ரோவுக்கு ஒரே டிக்கெட்-ஜூலையில் அறிமுகம்
https://chennaimetrorail.org/
1 min read

பெருநகரங்களில் ஒன்றான சென்னையில் பொதுப் போக்குவரத்திற்காக மாநகர பேருந்துகள், மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இவற்றை நாள்தோறும் லட்சக் கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இவற்றில் பயணம் செய்ய தனித்தனியாக டிக்கெட்டுகளை வாங்க வேண்டும்.

இதனால், ஏற்படும் சிரமங்களை தவிர்க்கவும், போக்குவரத்தை எளிமையாக்கவும்

புதிய செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

இதன்மூலம், மாநகர பேருந்துகள், புறநகர் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில் என அனைத்திலும் ஒரே டிக்கெட்டில், பொதுமக்கள் பயணிக்க முடியும்.

புதிய செயலி மூலம் எந்தெந்த பகுதிகளுக்கு எப்படி செல்ல வேண்டும், எந்த வகை போக்குவரத்தை பயன்படுத்தினால் விரைவாக செல்ல முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் APP-ல் இடம் பெறும்.

QR கோடு மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யலாம்.

முதல் கட்டமாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுக்கு ஜூலை முதல் வாரத்தில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை கொண்டு வரப்படுகிறது.

மெட்ரோ வழங்க உள்ள ஸ்மார்ட் கார்டுகளை இப்படிப்பட்ட பேருந்துகளிலும் பயன்படுத்தும் வசதி விரைவில் வரும்.

இத்தகைய வசதியை பயன்படுத்தி, ஒரே டிக்கெட்டை எடுத்து, பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் பொதுமக்கள் பயணிக்கலாம்.

======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in