

TN Election Post Exit Polls : தமிழக தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று, முன்னாள் காவல்துறையினர் மூலம் கருத்துக்கேட்பு நடத்தப்பட்டது.
ஒவ்வொரு தொகுதியிலும் 100 பேரிடம் கருத்து கேட்பு என்ற வகையில்,
2.34 லட்சம் பேரிடம் வெற்றி வாய்ப்பு பற்றி அவர்கள் கேட்டறிந்துள்ளனர்.
234 தொகுதிகளிலும் முன்னாள் காவல் துறையினரை வைத்து, ஐபிஎஸ் அதிகாரி ரவி நடத்திய தனிப்பட்ட கருத்து கணிப்பு இதுவாகும்.
2.34 லட்சம் பேரிடம் கருத்துக்கேட்பு
தமிழ்நாட்டின் 234 தொகுதிகளில் தலா 10 முன்னாள் காவல் துறையினரை வைத்து, அவர்களில் ஒவ்வொருவரும், ஒவ்வொரு தொகுதியிலும் 100 பொதுமக்களை சந்தித்து இந்த கருத்துக்கேட்பில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, 2340 முன்னாள் காவல்துறையினர், தமிழ்நாடு முழுவதும் 2.34 லட்சம் பேரிடம் கருத்துக் கேட்டிருக்கிறார்கள்.
4.88 கோடி பேர் வாக்களிப்பு
ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் தமிழகத்தில், சுமார் 4.88 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அதில் 2.27 கோடி ரேசன் அட்டைதாரர்கள் இதில் வாக்களித்துள்ளனர்.
கருத்துக்கேட்பில் ஒவ்வொரு தொகுதியிலும் 40 குடும்பத்தைச் சேர்ந்த 100 பேரிடம் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது பற்றி கேட்கப்பட்டுள்ளன.
இது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பும் (Opinion Poll) இல்லை, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பும் இல்லை (Exit Poll) என்று தெரிவித்துள்ள ரவி, இது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எடுக்கப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட கருத்துக்கேட்பு (Post Exit Poll) எனவும் தெரிவித்துள்ளார்.
தவெக எத்தனை இடங்களில் வெல்லும்?
இதில் அனைத்து வயதினர், சமூகத்தினர், பாலித்தனவர்களை தேர்வு செய்து முன்னாள் காவல்துறையினர் கருத்துக்கேட்பில் ஈடுபட்டுள்ளனர். இதில் 41% தவெகவுக்கு வாக்குசதவீதம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
121 தொகுதிகளில் வெற்றி?
அதன்படி, 121 தொகுதிகள் வரை தவெகவுக்கு கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளதாக ரவி கூறினார். இதன்மூலம், தவெக தனித்து ஆட்சியமைக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
-----