

தமிழக தேர்தல் களம்
Matrize-IANS Opinion poll predicts NDA Alliance's massive victory in Tamil Nadu : தமிழக சட்டமன்றத்திற்கு ஒரே கட்டமாக, ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் வரும் 30ம் தேதி தொடங்குகிறது.
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் என தற்போதைக்கு நான்கு முனைப்போட்டிக்கான வாய்ப்பு உள்ளது. என்டிஏ கூட்டணிக்கு விஜய் வந்தால் மூன்று முனைப்போட்டி நிலவும்.
தேர்தல் கருத்துக் கணிப்பு
இந்தநிலையில், IANS நிறுவனம் Matrize உடன் இணைந்து தேர்தல் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தி இருக்கிறது. இதன் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி, அதிமுக - பாஜக கூட்டணி தான் தமிழக சட்டசபை தேர்தலில் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணி - 114-127 தொகுதிகள்
சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், அதிமுக114 தொகுதிகள் முதல் 127 தொகுதிகள் வரை வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவை தவிர்த்து வேறு யாரும் தொடர்ச்சியாக 2வது முறை ஆட்சிக்கு வந்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக - 104-114
ஆளும் கட்சியான திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் 104 முதல் 114 தொகுதிகள் வரை வெற்றிபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இரண்டு கட்சிகளுக்கும் இடையே போட்டி கடுமையாக இருக்கும், தொகுதி எண்ணிக்கையை பொருத்தவரை பெரிய இடைவெளி இருக்காது என்றும் தெரிகிறது.
3வது இடத்தில் தவெக
இவர்களை தொடர்ந்து மூன்றாம் இடத்தில் தவெக கட்சி உள்ளது. கருத்துக் கணிப்பின்படி, தமிழக வெற்றிக் கழகம் 6 முதல் 12 தொகுதிகள் வரை வெற்றி பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற கட்சிகள் 1 முதல் 6 தொகுதிகளில் வெற்றி பெறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சிகளின் வாக்கு சதவீதம் :
* அதிமுக கூட்டணிக்கு 39 முதல் 40 % வாக்குகள்
* திமுக கூட்டணிக்கு 37 - 38 சதவீதம் வாக்குகள்
* தமிழக வெற்றிக் கழகத்துக்கு 14 -15 % வாக்குகள்
* இதர கட்சிகளுக்கு 12% வாக்குகள் கிடைக்கும்
தவெக-வால் திமுகவுக்கு பாதிப்பு
கருத்து கணிப்பில் திமுகவை காட்டிலும் தொகுதியிலும், வாக்கு சதவீதத்திலும் அதிமுக கூட்டணி முன்னிலையில் இருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை கூட்டி இருக்கிறது.
குறிப்பாக, இந்த முடிவுகளுக்கு தவெக ஒரு முக்கிய காரணம் என்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. என்டிஏ கூட்டணிக்கு தவெக வந்தாலும், அது திமுக வங்கியில் மேலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
=============