காங்கிரஸில் சீட் கேட்டால்? விசிகவில் வாய்ப்பு! : திருமா விலகல், ஜோதிமணி போட்டி... பின்னணி என்ன?

திமுக கூட்டணியில் விசிக சார்பாக திருமாவளவன் காட்டுமன்னார்கோயில் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் , புதிய வேட்பாளராக ஜோதிமணி என்பவரை அறிவித்துள்ளார் திருமாவளவன்.
Opportunity in VK!, Thiruma's withdrawal, Jothimani contest, what is the background?
Opportunity in VK!, Thiruma's withdrawal, Jothimani contest, what is the background? google
1 min read

ாங்கிரஸில் சீட் கேட்டதற்கு விசிக வில் வாய்ப்பு ?

வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸில் சீட் கெட்டவர்க்கு தற்போது விடுதல் சிறுத்தை கட்சியில் ஏற்கனவே வேட்பாளராக அறிவித்திருந்த தொல்.திருமாவளவனுக்கு பதிலாக ஜோதிமணி என்பவரை புதிய வேட்பாளராக அறிவித்தார் திருமாவளவன் .

திமுக கூட்டணியில் விசிக்க வின் தொகுதிகள்

சட்டமன்ற தேர்தலுக்கான திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தை கட்சிகக்கு எட்டுத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதன்படி விசிகவுக்கு; காட்டுமன்னார்கோயில் (தனி), திருப்போரூர், பெரியகுளம் (தனி), செய்யூர் (தனி), அரக்கோணம், திண்டிவனம் (தனி), கள்ளக்குறிச்சி (தனி), பண்ருட்டி ஆகியவை உள்ளன.

விசிக வேட்பாளர்கள்

இதனைத் தொடர்ந்து விசிக சார்பில் போட்டியிடும் எட்டு வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டார்.

அதன்படி, காட்டுமன்னார்கோயில் – திருமாவளவன், திண்டிவனம் – வன்னியரசு, செய்யூர் - சிந்தனைச் செல்வன், திருப்போரூர் – பன்னீர்தாஸ், பெரியகுளம் - ஆற்றல் அரசு,

கள்ளக்குறிச்சி – மாலதி, அரக்கோணம் - எழில் கரோலின்,பண்ருட்டி - அப்துல் ரகுமான் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தற்போது காட்டுமன்னார் கோயில் தொகுதியில் போட்டியிட போவதில்லை அதற்கு பதிலாக ,தற்போது ஜோதிமணி என்பவரை அறிவித்துள்ளார் திருமாவளவன்.

யார் இந்த ஜோதிமணி ?

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் எல். இளைய பெருமாள் மகன் தான் தற்போது விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் காட்டுமன்னார் கோயில் தொகுதியில் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் .

காங்கிரஸில் தன்னை நிலை நாட்டிய எல். இளைய பெருமாள்

ஜோதிமணி தந்தையாகிய இவர் , தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், மூன்று முறை எம்.பி., ஒருமுறை சட்டமன்ற உறுப்பினர், அகில இந்திய அளவிலான தேசிய கமிட்டியின் தலைவர், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனியாக ‘இந்திய மனித உரிமை கட்சி’யும் ஆரம்பித்தார். அந்த கட்சியின் சார்பில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் இருந்துள்ளார்கள். காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் கடைசிவரை ஒரு அம்பேத்கரிஸ்ட்டாகத்தான் வாழ்ந்தார்.

இப்படி சமூகத்திற்காக அரும்பாடு பட்ட எல். இளையபெருமாள் மகன் ஜோதிமணிக்குத்தான் விசிக தலைவர் திருமாவளவன் தற்போது சீட் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்

காங்கிரஸில் இருந்தாலும் விசிகவில் போட்டி

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜோதிமணி, 1946-ஆம் அப்பா எல். இளையபெருமாள் ஆரம்பித்த ஆதிதிராவிட மகாஜன சங்கத்தை நடத்திக்கொண்டு கிராமம்தோறும் சென்று, அப்பாவின் கொள்கைகளைப் பரப்பிக்கொண்டிருப்பவர்.

பரபரப்பான அரசியல் வட்டாரங்கள்

விசி்கவில் இல்லாத, காங்கிரஸில் சீட் கேட்ட ஒருவற்கு காட்டுமன்னார் தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் வேட்பாளராக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது

=======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in