”ஒரு யூனிட் ரூ. 35” : தமிழக அரசுக்கு ஷாக் கொடுக்கும் மின்சாரம் : எகிறும் எதிர்க்கட்சிகள், அமைச்சர் கூல் விளக்கம்...!

ஒரு யூனிட் மின்சாரம் 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என்று தவெக அரசு தெரிவித்து இருப்பதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளன.
Opposition parties strongly condemned TVK govt's announcement that a unit of electricity will be procured at ₹35
Opposition parties strongly condemned TVK govt's announcement that a unit of electricity will be procured at ₹35source:thamizhalai,ai generated
3 min read

மக்களின் உயிர்நாடி மின்சாரம்

மின்சாரம் என்பது இப்போ மக்களின் உயிர்நாடியாவே மாறிடுச்சு. கரண்ட் இல்லாம, வீடு தொடங்கி அரசு வரை எதுவுமே செயல்பட முடியாது. மழை பற்றாக்குறை காரணமா தமிழகத்துல நீர் மின்சார உற்பத்தி தடைபட்டு இருக்கு.

ரூ. 35க்கு கொள்முதல்

எனவே, மின்வெட்டை சமாளிக்க தமிழக அரசு வெளிச்சந்தையில ஒரு யூனிட் 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய டெண்டர் விட்டு இருக்கிறதா தகவல் வெளியாகி இருக்கு. ஒரு யூனிட் மின்சார உற்பத்திக்கு 5 ரூபாய் போதும் அப்படின்னு சொல்ற திமுக, 7 மடங்கு அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதா என்ற கேள்வியை முன்வச்சு இருக்கு.

தமிழகத்தின் மின்தேவை

இந்தியாவில வளர்ச்சி பாதையில முன்னணியில இருக்கிற மாநிலங்களில ஒண்ணு தான் தமிழ்நாடு. ஆயிரக் கணக்கான தொழிற்சாலைகள், பட்டி தொட்டி எல்லாம் மின்சார இணைப்பு அப்படின்னு, செயல்படுறதால, தினசரி மின் தேவை சராசரியாக 20,000 முதல் 21,000 மெகாவாட் ஆக இருக்கு. ஏப்ரல் மாதம் உச்சபட்சமா மின்சார தேவை 21 ஆயிரத்து 60 என்ற அளவில இருந்திச்சு.

குறையாத வெயில், மின்நுகர்வு அதிகரிப்பு

பொதுவா கத்திரி வெயில் முடிஞ்ச பிறகு, மழை அடிக்கடி பெய்யும் என்பதால் மின்தேவை குறையும். ஆனா, இந்த ஆண்டு சூப்பர் எல் நினோ தாக்கத்தால, அக்டோபர் மாதம் கூட வெயிலின் தாக்கம் குறையல, தென் மாவட்டங்கள், வட மாவட்டங்களில 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகுது.

மின் உற்பத்தியில் பாதிப்பு

நீர்மின்சார உற்பத்தி இல்லாதது, அனல்மின் நிலையங்களில ஏற்படுகிற கோளாறுகள் காரணமா மின்சார தயாரிப்பு குறைந்து பற்றாக்குறை இருக்கு. சிறு கிராமங்கள் முதல், தலைமைச் செயலகம் வரை மின்வெட்டு ஏற்படுறது. எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைக்கவும், பொதுமக்கள் விமர்சிக்கவும் காரணமாக இருக்கு.

எனவே, மின் தேவையைச் சமாளிக்க, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) வெளி சந்தை மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் மின்சாரத்தைக் கொள்முதல் செஞ்சிக்கு வருது.

ஒரு யூனிட் மின்சாரம் 35 ரூபாய்

அந்தவகையில, ஒரு யூனிட் மின்சாரம் 35 என்ற விலையில, சுமார் 4,500 மெகாவாட் மின்சாரத்தை தமிழக அரசு கொள்முதல் செய்ய டெண்டர் விட்டு இருக்கிறதா தகவல் வெளியாகி இருக்கு.

இது வழக்கமாக வாங்கப்படும் விலையைவிட மூன்று மடங்கு அதிகமாகும்.

திட்டமிடலில் குளறுபடியா?

ஒரு யூனிட் மின்சாரத்தை 32 முதல் 37 ரூபாய் வரை கொள்முதல் செய்வது என்பது, விலை தொடர்பான பிரச்சினையாக மட்டுமை பார்க்க முடியாது.

திட்டமிடலில் இருக்கும் குளறுபடிகளே முக்கிய காரணமாக இருக்கிறது. அனல், புனல் மின்சார உற்பத்தி, தேவை இவற்றை எல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டால், கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்படாது.

ஆந்திரா ரூ.20க்கு கொள்முதல்

நமது அண்டை மாநிலமான ஆந்திரா ஒரு யூனிட் மின்சாரத்தை 16 முதல் 20 வரை தான் கொள்முதல் செய்யுது. முன்கூட்டியே கணித்து, டெண்டர் வெளியிட்டதால, ஆந்திர அரசுக்கு குறைந்த விலையில மின்சாரம் கிடைத்தது. ஆனா, தமிழக அரசு அதை விட இரண்டு மடங்கு விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கு.

தமிழக அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகள்

நிலைமையை முன்கூட்டியே கணித்து, குறைந்த விலையில் மின்சாரம் கொள்முதல் செய்ய ஏன் நடவடிக்கை எடுக்கப்படல? ஒப்பந்தங்கள் ஏன் மேற்கொள்ளப்படல? ஏதாவது ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டனவா?

35 ரூபாய்க்கு வாங்கின அரசுக்கு எவ்வளவு கூடுதலாக செலவாகும், இந்த தவறுக்கு யார் பொறுப்பு? போன்ற விவரங்களை வெளிப்படையா தெரிவிக்க வேண்டிய கடமை தவெக அரசுக்கு இருக்கு.

மின்சார வாரியத்தின் கடன்சுமை

ஏற்கனவே கடன்சுமையால மின்சாரம் வாரியம் தள்ளாடிக் கொண்டு இருக்கிற சூழல்ல, ஒரு யூனிட்டுக்கு 35 ரூபாய் செலவழிப்பது பெரும் சிக்கலுக்கு வழி வகுக்கும்.

ஒரு யூனிட் உற்பத்தி - ரூ.5

மின்சார உற்பத்தி செலவு யூனிட் 5 ரூபாய் தான், ஆனா 7 மடங்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் அரசு ஏன் ஏற்பட்டது அப்படின்னு கேள்வி எழுப்பி இருக்கு திமுக.

தவெக அரசுக்கு திமுக கேள்வி

இதுபற்றி பதிவு ஒன்னை வெளியிட்டு இருக்கிற முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா, ஆட்சிக்கு வந்த தவெக, 2023ல திமுக அரசு அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததா குற்றம்சாட்டியதை சுட்டிக் காட்டி இருக்காரு.

திமுக ஆட்சியில் வெறும் 5 ரூபாய் 40 காசுகள் முதல் 9 ரூபாய் 50 காசுகள் வரை ஒப்புதல் பெற்ற மின்கொள்முதல் கட்டணங்கள், இப்போ 35 ரூபாய் எட்டி இருக்க காரணம் என்ன? தமிழ்நாடு அரசு ஜோசியம் பார்த்து கடைசி நேரம் வரை காத்திருந்ததா..? அப்படி காட்டமாக கேட்டு இருக்கிறாரு.

எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்

எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, தினகரன் போன்றவங்களுக்கும் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் குறித்து கேள்வி எழுப்பி இருக்காங்க.

அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

இதற்கு விளக்கம் கொடுத்து இருக்கிற அமைச்சர் நிர்மல் குமார், பீக் அவர்ஸ் தேவையை சமாளிக்கவே ஒரு யூனிட் மின்சாரம் 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதாக விளக்கம் அளித்தார்.

1,500 யூனிட் மட்டுமே வாங்க இருக்கிறோம். நீண்டகால ஒப்பந்தம் எதையும் போடவில்லை, கொள்முதல் செய்யா விட்டால், தினமும் 2 முதல் 3 மணி நேரம் மின்தடை ஏற்படும்.

5 ஆண்டுகால திமுக ஆட்சியில நீண்ட கால திட்டங்களை போடாததே, பிரச்சினைக்கு அடிப்படை காரணம் என்றும் குறிப்பிட்டார். இனி நீண்டகால ஒப்பந்தங்கள் மேற்கொளப்படும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் உறுதியளித்தார்.

தமிழ்நாட்டின் மின்துறை ஏற்கெனவே பெரிய கடன் சுமையில்தான் இருக்கு. மார்ச் மாத நிலவரப்படி, தமிழ்நாட்டின் மின்துறை நிறுவனங்களின் மொத்தக் கடன் 2 லட்சத்து 47 ஆயிரத்து 130 கோடி ரூபாயை எட்டி இருந்துச்சு.

இந்த நிறுவனங்களோட ஒட்டுமொத்த நஷ்டமும் 1.82 லட்சம் கோடி ரூபாயாக இருக்குனு தவெக அரசின் வெள்ளை அறிக்கையில தெரிவிக்கப்பட்டுச்சு.

மின்சாரத்திற்கு பெரிய விலை

மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவோம், குறைந்த விலைக்கு மின் கொள்முதல் செய்வோம் அப்படின்னு உறுதியளிச்ச தவெக அரசு, இப்போ வெளிச்சந்தையில் இருந்து பெரிய விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கு.

எனவே, மின்சார கொள்முதல் விவகாரம், தவெக அரசுக்கு பெரும் சிக்கலையும், எதிர்க்கட்சிகளின் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைமையையும் உருவாக்கி இருக்கு.

===============================

தவெக அரசுக்கு மின்சார ஷாக்

ஒரு யூனிட் 35 ரூபாய்

விளாசும் எதிர்க்கட்சிகள், அமைச்சர் விளக்கம்

=================

logo
Thamizh Alai
www.thamizhalai.in