தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு :நகலை எரித்தும்,கருப்பு கொடி ஏற்றியும் எதிர்ப்பு

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் கறுப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்
Opposition to the constituency delimitation bill: Burning copies and hoisting black flags in protest
Opposition to the constituency delimitation bill: Burning copies and hoisting black flags in protest google
1 min read

தொகுதி மறுவரையறை: எதிப்பு

இன்று நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இதனை ஒட்டி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் வீடுகள் தோறும் கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இடஒதுக்கீட்டிற்கான சிறப்பு கூட்டம்

மக்​கள​வைத் தொகு​தி​களின் எண்​ணிக்​கையை 816 ஆக உயர்த்த வகை செய்​யும் மசோ​தாக்​களை நிறைவேற்ற நாடாளு​மன்​றத்​தின் சிறப்பு கூட்​டம் இன்று நடைபெறுகிறது.

கூட்டத் தொடரைக் கூட்ட வேண்டிய அவசரத் தேவை என்ன?

ஐந்து மாநிலங்களில் தேர்தல்கள் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டிய அவசரத் தேவை என்ன?

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரை ஏப்ரல் 29-க்குப் பிறகே கூட்ட வேண்டும்" என்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் நியாயமான கருத்தைப் புறக்கணிப்பதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன?

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தாமலேயே, மிக முக்கியமான அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்ய முயற்சிப்பது சர்வாதிகாரத்தை நோக்கிய நகர்வு இல்லையென்றால் வேறு என்னவாக இருக்க முடியும்?

எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் எழுப்பிய கேள்விகளுக்கு இது பதிலளிக்கவில்லை. குறைந்தபட்சம் மக்களின் கேள்விகளுக்காவது இது பதிலளிக்குமா?தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளைப் புறக்கணித்து, வடக்கின் மீது அதிகாரத்தைப் பொழியும் மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளை திமுக சும்மா வேடிக்கை பார்க்காது.

இது இங்கு வாழும் மக்களின் எதிர்காலம்! எங்கள் சம்மதம் இல்லாமல், எங்களிடம் பேசாமல் இது தொடர்பாக எடுக்கப்படும் எந்தவொரு முடிவையும் நாங்கள் ஏற்க மாட்டோம்—அதற்கு எவ்வளவு செலவானாலும்

சரி நாங்கள் நியாயமானதொகைவரையறையைக் கோருகிறோம் !என்றும் குறிப்பிட்டுள்ளார்

முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு பதிவு

தொடர்ந்து, இன்று நடைபெற்ற போராட்டம் குறித்து தமிழக முதல்வர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத்தீ பரவட்டும், பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும். அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது. இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.

இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பாஜக.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும். “தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி கூறியது

தொகுதிக்கு மறுவரையறை எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று தெரிந்தும் முதல்வர் ஸ்டைல் double game ஆடுகிறார் என்று தெரிவித்துள்ளார், மேலும் இந்த

தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டிற்கு எந்த வகையான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் , ஸ்டாலின் மகளிருக்கான இடஒதுக்கீட்டினை தடுப்பதாகவும் ,பாதிப்பை ஏற்படுத்தாது என்று மத்திய அரசு உறுதி அளித்திருப்பதாகவும் எடப்பாடி தெரிவித்துள்ளார்.

=============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in