”நான் என்ன தவறு செய்தேன்” "தனிக்கட்சி தொடங்க மாட்டேன்" : ஓ.பன்னீர் செல்வம் உறுதி!

O. Panneerselvam about New Party Launch : எந்த சூழ்நிலை வந்தாலும் சரி, ஒருபோதும் தனிக்கட்சி தொடங்க மாட்டேன் என்று ஓ.பன்னீர் செல்வம் உறுதிபட தெரிவித்துள்ளார்.
I will never start a separate new party: O. Panneer Selvam is confident on Jayalalithaa Amma Birthday
I will never start a separate new party: O. Panneer Selvam is confident on Jayalalithaa Amma Birthdaysource:google
1 min read

I will never start a separate new party: O. Panneer Selvam:

ஜெயலலிதா பிறந்தநாள்

O. Panneerselvam about New Party Launch : மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தேனியில் நலத்திட்ட உதவிகள்

தேனியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஓ.பன்னீர் செல்வம் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது,

ஜெயலலிதாவின் கட்டளை

யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக அதிமுகவை மாற்றியவர் ஜெயலலிதா. அதிமுகவை காவல் தெய்வமாக காத்தவர். 2001இல் இக்கட்டான சூழ்நிலையின் போது என்னை முதல்வராக நியமித்தார். அவருடைய கட்டளையை ஏற்று தான் முதல்வராக பணியாற்றினேன்.

3 வது முறையாக முதல்வரான போது...

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு கடாயப்படுத்தி தான் என்னை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ள வைத்தார்கள் . ஆனால் எனக்கு கொடுத்த முதல்வர் பதவியை அப்படியே அவர்களுக்கு திருப்பித் தந்தேன் இதுதான் வரலாறு.

கட்டாயப்படுத்தி முதல்வர் பதவி

ஆனால் மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற போது என்னுள் பல பிரச்சனைகள் இருந்தது. கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள். பின்னர் என்னை அனைத்து வகையிலும் அவமானப்படுத்தி முதல்வர் பதவியில் இருந்து வெளியேற்றினார்கள் என்றார்.

உழைப்பால் மட்டுமே உயர்ந்தேன்

1980 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை உழைப்பால் மட்டுமே உயர்ந்து இருக்கிறேன். எனது உழைப்பை யாருக்கும் இம்மியளவு கூட குற்றம் சொல்ல முடியாது.

நான் என்ன தவறு செய்தேன்

அரசியலில் என்னை இந்த அளவிற்கு தனிமைப்படுத்தும் வகையில் நான் என்ன தவறு செய்தேன். என்ன தவறு செய்தேன் என்ற உண்மையை சொல்லுங்கள். நான் அரசியலை விட்டே விலகி விடுகிறேன்.

திமுகவில் இணையப் போகிறேனா?

திமுகவில் இணையப்போகிறேன் என நீங்கள் தான் சொல்கிறீற்கள். எதிர்க்கட்சியில் இருந்தாலும் சரி ஆளுங்கட்சியில் இருந்தாலும் சரி , ஆட்சி முடிந்ததும் அனைவருக்கும் வாழ்த்து சொல்வது எனது மரபு.

இதை திரித்து நான் திமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பது போல் கருத்து பரவி விட்டது என்றார்.

பசுந்தோல் போர்த்திய புலி

டிடிவி தினகரன் என்னை புசுந்தோல் போர்த்திய புலி என்கிறார். அவர் மீது நான் மரியாதை வைத்திருக்கிறேன். எனக்கும் கடினமான வார்த்தைகள் பேசத் தெரியும். எனினும் , அரசியல் நாகரீகம் கருதி பேசாமல் இருக்கிறேன் என்றார்.

தனிக் கட்சி?

தொடர்ந்து பேசிய அவர், எந்த சூழ்நிலை வந்தாலும் சரி, ஒருபோதும் தனிக்கட்சி தொடங்க மாட்டேன் என்றும் உறுதிபட தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in