“ஸ்டாலின் பேச்சின் பின்னணி” : ஆட்சியை கவிழ்க்க சதி! : அதிகாரம் இல்லாமல் திமுகவால் இருக்கவே முடியாது, CPM காட்டம்...

தமிழகத்தில் விரைவில் தேர்தல் என்று ஸ்டாலின் பேசியதன் பின்னணி இப்போது தான் புரிவதாக, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சாடியுள்ளார்.
குதிரைபேரம் பெ. சண்முகம் காட்டம்
குதிரைபேரம் பெ. சண்முகம் காட்டம்google
2 min read

விரைவில் தேர்தல் - ஸ்டாலின் பேச்சு

தமிழக சட்டமன்றத்துக்கு 6 மாதங்களில் தேர்தல் வர வாய்ப்பு இருக்கிறது. எனவே, கட்சியினர் தயாராக இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த வாரம் பேசி இருந்தார்.

தவெக எம்எல்ஏக்களுக்கு வலை

இது தமிழக அரசியலில் புயலை கிளப்பியது. அரசை கவிழ்க்க திமுக- அதிமுக இணைந்து சதி செய்வதாக தவெக குற்றம்சாட்டி இருந்தது.

தவெக எம்எல்ஏ - 35 கோடி பேரம்

இதற்கு வலு சேர்க்கும் விதமாக, ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் 35 கோடி ரூபாய் அளவுக்கு குதிரை பேரம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. எம்எல்ஏ அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் இதுவரை 7 பேரை கைது செய்திருக்கிறார்கள்.

செந்தில் பாலாஜியை தேடும் போலீஸ்

இந்த விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்கை போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது.

ஆட்சி இல்லாமல் திமுகவால் இருக்க முடியாது

இந்தநிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், “திமுகவால் ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் வழங்கி இருக்கும் தீர்ப்பை ஏற்க மறுக்கின்றனர்.

ஆட்சியை கவிழ்க்க குதிரை பேரம்

அதனால்தான் இதுபோன்ற ‘குதிரை பேரம்’, ‘கழுதை பேரம்’ போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். தவெக ஆட்சியை எப்படியாவது கவிழ்க்க வேண்டும், தாங்கள் எப்படியாவது மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்கிற நோக்கில் இத்தகைய முயற்சிகள் நடைபெறுகின்றன.

ஸ்டாலின் பேசியதன் பின்னணி இதுவா?

விரைவில் தேர்தல் வரும், ஆட்சி மாற்றம் வரும் என சில நாட்களுக்கு முன்பாக திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதற்கான பின்னணி என்னவென்பது இப்போது தான் தெரிகிறது.

திமுகவினர் அதற்கான ஒரு தீவிர முயற்சியில் இருக்கிறார்கள் என்பதையே சட்டப்பேரவை உறுப்பினரை பேரம் பேசி வாங்கும் செயல்கள் காட்டுகின்றன. பேர முயற்சியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

விலகி இணைவதில் தவறில்லை

சட்டப்பேரவை உறுப்பினர்கள் தாமாக முன்வந்து ஒரு கட்சியில் இருந்து விலகி வேறொரு கட்சியில் சேர்வது இயல்பானது. தமிழ்நாட்டில், இடதுசாரிகளை தவிர மற்ற கட்சிகளை சேர்ந்தவர்கள், ஆளுங்கட்சியை நோக்கி மாறுவது என்பது இதற்கு முன்னரும் பலமுறை நடந்துள்ளது.

விலைபேசி வாங்குவதை ஏற்க முடியாது

கோடிக்கணக்கான ரூபாய்க்கு விலைபேசி ஒருவரை வாங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே இதில் தொடர்புடையவர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது முறையாக வழக்குப்பதிவு செய்து சட்டப்படி தண்டனை பெற்று தரும் நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.

எம்எல்ஏக்கள் ராஜினாமா நல்லது கிடையாது

அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து தவெகவில் இணைவது ஓர் ஆரோக்கியமற்ற அரசியல் என்பதை நான் முன்னரே கூறியிருக்கிறேன். இந்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறது” என்று பெ. சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்தார்.

=====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in