பாரா ஆசிய விளையாட்டு: வெள்ளிப் பதக்கம் வென்ற கஸ்தூரி ராஜாமணிக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை! முதல்வர் விஜய் வாழ்த்து!

தமிழ்நாடு அரசு சார்பில் அவருக்கு ரூ. 50 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
Para Asian Games
Para Asian Gamessource:google
1 min read

Para Asian Games Kasthuri Rajamani Silver Medal CM Vijay Incentive

ஜப்பான் பாரா ஆசிய விளையாட்டு வலுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கஸ்தூரி ராஜாமணிக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை

ஜப்பானில் நடைபெற்று வரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான வலுதூக்குதல் (Powerlifting) போட்டியில் 67 கிலோ எடைப் பிரிவில் தமிழக வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

ரூ. 50 லட்சம் உயரிய ஊக்கத்தொகை அறிவிப்பு

சாதனை படைத்த வீராங்கனை கஸ்தூரி ராஜாமணியைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் அவருக்கு ரூ. 50 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய்யின் எக்ஸ் தளப் பதிவு

இது குறித்து முதலமைச்சர் விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"ஜப்பானில் நடைபெற்று வரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான வலுதூக்குதல் போட்டியில், 67 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுதலையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.50 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி அவர்கள் தன்னம்பிக்கை, அயராத உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம் பெற்றுள்ள இம்மகத்தான வெற்றி, தமிழ்நாட்டின் இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும்.

அவர் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

============

logo
Thamizh Alai
www.thamizhalai.in