பரந்தூரை கைவிடுவது பேரிடி”: விஜய் அரசை ஒரே குரலில் சாடிய ஸ்டாலின் - உதயநிதி...!

தமிழக வளர்ச்சிக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும் பின்னடைவு ஏற்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்...
Parandur Airport Project Cancelled: Stalin and Udhayanidhi Slam Vijay Government; Issue Sparks Political Controversy
Parandur Airport Project Cancelled: Stalin and Udhayanidhi Slam Vijay Government; Issue Sparks Political ControversyAi Generated
2 min read

பரந்தூர் திட்டத்தை கைவிட்ட விஜய் அரசு :

சென்னைக்கு இரண்டாவது பசுமை விமான நிலையமாக திட்டமிடப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

விவசாய நிலங்கள் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஸ்டாலின் கடும் எதிர்ப்பு:

இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், "பரந்தூரை கைவிடுவது மாற்றமல்ல; தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மீள முடியாத பின்னடைவு" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பல்வேறு ஆய்வுகள் மற்றும் அனுமதிகளுக்குப் பிறகே பரந்தூர் தேர்வு செய்யப்பட்டதாகவும், நிலம் கையகப்படுத்தும் பணிகளும் பெருமளவில் நிறைவடைந்த நிலையில் திட்டத்தை கைவிடுவது மாநில வளர்ச்சியை பல ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளும் என்றும் கூறியுள்ளார்.

இளைஞர்களின் கனவுகளை பாதிக்கும்:

தொழில் வளர்ச்சி இல்லாமல் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய முடியாது என்றும், இந்த முடிவு தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

போட்டி மாநிலங்களுக்கு இது சாதகமாக அமையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியின் கண்டனம் :

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் இந்த முடிவை விமர்சித்துள்ளார்.

தமிழகத்தின் எதிர்கால உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட முக்கிய திட்டத்தை அரசியல் காரணங்களுக்காக கைவிடக்கூடாது என்றும், சென்னையின் வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு மாற்று தீர்வுகளை அரசு முன்வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொழில் முதலீடுகளுக்கு பாதிப்பு ஏற்படுமா?

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் இந்தியாவின் முக்கிய தொழில் மையங்களாக திகழ்கின்றன. வாகன உற்பத்தி, மின்னணு சாதனங்கள், செமிகண்டக்டர், ஏற்றுமதி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறைகளின் வளர்ச்சிக்கு மேம்பட்ட விமான உள்கட்டமைப்பு அவசியம் என தொழில் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விடுத்த அறிக்கை:

பரந்தூர் விமான நிலையம் அமைந்திருந்தால் தொழிற்பூங்காக்கள், சரக்கு கையாளும் மையங்கள் மற்றும் புதிய முதலீடுகள் அதிகரித்திருக்கும் என கூறப்படுகிறது.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை ரத்து செய்திருக்கும் Sofa Model அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தேவை கருதியே 2வது விமான நிலையம்

சென்னையில் பெருகி வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான சரக்கு போக்குவரத்து - எதிர்காலத் தேவை போன்றவற்றின் அடிப்படையில், சென்னைக்கு 2-ஆவது விமான நிலையம் அவசியம் என்பதை உணர்ந்து, பரந்தூர் விமான நிலையத் திட்டம் கழக அரசால் உருவாக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு 3 மடங்கு இழப்பீடு

இத்திட்டத்திற்கு Airports Authority of India, Union Civil Aviation Ministry உள்ளிட்டவை ஆய்வு செய்து, அனுமதி தந்துவிட்டன. இத்தகைய கடினமான அனுமதிகளைப் பெறுவது, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குச் சந்தை மதிப்பை விட 3 மடங்கு அதிகமான இழப்பீடு, மறு குடியமர்வு போன்ற முக்கியமான பணிகள் அனைத்தும் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் முதலமைச்சராக இருந்த போதே நடைபெற்றன.

அரசியல் காரணங்களுக்காக கைவிடுவதா?

இதற்காக அரசுத் தரப்பில் பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவையெல்லாம் நடந்த பிறகு, அற்ப அரசியல் காரணங்களுக்காக திட்டத்தையே கைவிடுகிறேன் என்று சொன்னால், அது அரசிற்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும். பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்துவதால், சென்னையை சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களை நோக்கி வெளியேறும் அபாயமும், புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் சூழலும் எழுந்துள்ளன. ஆகவே, தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தையும் - தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

===========

logo
Thamizh Alai
www.thamizhalai.in