பாக்யராஜ் மறைவு : ஆளுநர், முதல்வர் விஜய் இரங்கல் : முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு...

தமிழக ஆளுநர் மற்றும் முதல்வர் விஜய், இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்
Passing of Bhagyaraj: Governor, Chief Minister, and Vijay offer condolences; funeral to be held with full state honors.
Passing of Bhagyaraj: Governor, Chief Minister, and Vijay offer condolences; funeral to be held with full state honors. google
1 min read

ஆளுநர் அர்லேகர் இரங்கல்

மறைந்த இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு , தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் , தனது இரங்கலை தெரிவித்தெரிவித்துள்ளார்

இரங்கல் குறித்து தனது பதிவில் ஆளுநர் தெரிவித்துள்ளதாவது

மூத்த தமிழ் திரைப்ப்ட இயக்குநரும் , நடிகருமான கே. பாக்கியராஜ் , மறைவு பேரிழப்பாகும்

தனித்துவமான கதை சொல்லும் திறன், படைப்பாற்றல் மற்றும் தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு, அவரை ரசிகர்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கச் செய்துள்ளது.

அவரது திரைப்பயணம் மற்றும் மரபு, பல தலைமுறை திரைப்படக் கலைஞர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.

அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மறைந்த இயக்குநர் பாக்யராஜ் , அரசு மரியாதை வழங்கப்படும்

மறைந்த இயக்குநரும் , நடிகருமான பாக்யராஜ் உடலுக்கும் அர்சு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைப்பெறும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்

இது குறித்து முதல்வர் விஜய் தெரிவித்துள்ளதாவது

தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.

தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரு.கே. பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும்.

அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

திரு.கே.பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். திரைத்துறையில் திரு. கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.

என்று இவ்வாறு இரங்கல் தெரிவித்துள்ளார்

நாளை இறுதி சடங்கு நடைபெறும்

மறைந்த இயக்குநரும் ,நடிகருமான பாக்யராஜ் உடலானது நாளை, பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

அஞ்சலி செலுத்தி வரும் திரையுலகினர்

மறைந்த இயக்குநரின் உடலுக்கு , திரையுலகினர் பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

==============

logo
Thamizh Alai
www.thamizhalai.in