பாக்யராஜ் மறைவு : தலைவர்கள் இரங்கல், முதல்வர் விஜய், ஸ்டாலின், திருமாவளவன் நேரில் அஞ்சலி..

மறைந்த இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு , தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
Passing of Bhagyaraj: Leaders offer condolences; Stalin and Thirumavalavan pay personal tributes.
Passing of Bhagyaraj: Leaders offer condolences; Stalin and Thirumavalavan pay personal tributes. google
2 min read

மறைந்த இயக்குநர் பாக்யராஜ் , தமிழக தலைவர்கள் அஞ்சலி

மறைந்த இயக்குநரும் , நடிகருமான பாக்யராஜ் உடலுக்கு தமிழக தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி

மறைந்த இயக்குநரும் , நடிகருமான பாக்யராஜ் உடலுக்கு , தமிழக முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார் , இறப்பு செய்தி கேட்டவுடனே , புகழஞ்சலி செலுத்திருந்தார் , அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைப்பெறும் என்று தெரிவித்திருந்தார்

திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

திமுக தலைவரும் , முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் மறைந்த இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்

இது குறித்து தனது இரங்கல் பதிவில் ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது

ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்! இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய இயக்குநராக வலம் வந்தவர் திரு. பாக்யராஜ் அவர்கள். தன்னைப் போலவே மேலும் பலரை இயக்குநர்களாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர்.

சில மாதங்களுக்கு முன்புதான், திரு. பாக்யராஜ் அவர்கள் திரையுலகில் 50 ஆண்டுகாலத்தை நிறைவுசெய்ததற்கான விழாவில் கலந்துகொண்டு, முதலமைச்சராக மட்டுமின்றி, அவரது இரசிகனாகவும் அந்த விழாவில் பேசியிருந்தேன். அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன. திரைத்துறையில் இன்னும் பல ஆண்டுகள் பங்களிக்கும் வாய்ப்பையும் ஆற்றலையும் பெற்றிருந்த அவர் தம் வாழ்வை நிறைவு செய்து கொண்டுவிட்டது பெரும் இழப்பு.

அவரை இழந்து தவிக்கும் திருமதி. பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, சரண்யா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். தமது படைப்புகளால் பாக்யராஜ் அவர்கள் என்றென்றும் தமிழ்நாட்டு மக்களின் பிரிக்க முடியாத அங்கமாகத் தொடர்ந்து வாழ்வார்.என்றும் தெரிவித்துள்ளார்

விசிக தலைவர் திருமாவளவன் நேரில் அஞ்சலி

விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் திருமாவளவன் மறைந்த இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் , அவரை இழந்து வாடும் குடுப்ம்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார்

அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

பிரபல திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக விளங்கிய திரு. K பாக்யராஜ் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தவர் மறைந்த திரு.

பாக்யராஜ் அவர்கள். “அண்ணா நீ என் தெய்வம்” என்ற புரட்சித் தலைவர் அவர்களின் முடிவுறாத படத்தின் காட்சிகளை வைத்து, அதற்கேற்ப ஒரு புதிய திரைக்கதை அமைத்து, “அவசர போலீஸ் 100” என்ற படமாக எடுத்து அதில் வெற்றியும் கண்டார்.

மாண்புமிகு புரட்சித் தலைவர் அவர்களும் திரு. பாக்யராஜ் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தார். இந்திய திரையுலகின் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்குரிய அவர்தம் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பதாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை

சிறந்த இயக்குநரும், நடிகரும், இந்திய அளவில் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவருமான, திரு. K. பாக்கியராஜ் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. தன்னுடைய திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றிருந்தவர்.

எளிய, பண்பான மனிதராகத் திகழ்ந்தவர். திரு. பாக்கியராஜ் அவர்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!என்று தெரிவித்துள்ளார்

=======================

logo
Thamizh Alai
www.thamizhalai.in