தமிழ்நாட்டில் அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை : அன்புமணி குற்றச்சாட்டு

Anbumani on TAPS Pension Scheme : தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை எனவே பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்
Pension scheme promised to government employees in Tamil Nadu has not yet been implemented: Anbumani alleges
Pension scheme promised to government employees in Tamil Nadu has not yet been implemented: Anbumani alleges google
1 min read

அன்புமணி குற்றச்சாட்டு

Anbumani on TAPS Pension Scheme : தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி,

இன்னும் 3 வாரங்களில் தமிழக மக்கள் கொடுக்கும் கடுமையான தண்டனையை திமுக அரசால் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்?

இதுகுறித்து பேசிய பாமக தலைவர் அன்புமணி தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்து விட்டதாக தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், மூன்று மாதங்களாகியும் இன்னும் அத்திட்டம் நடைமுறைக்கு வரவில்லை என்று திமுக அரசிற்கு கேள்வியை முன்வைத்துள்ளார்

மக்களை ஏமாற்றுவதற்கே அனைத்தும்

அறிவிக்கப்பட்ட உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாததற்கும், கவுரவ விரிவுரையாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வு இரு மாதங்களாக வழங்கப்படாததற்கும் வேறொரு கரங்கள் ஏதும் இல்லை ,

மாறாக அரசு ஊழியர்களையும், கவுரவ விரிவுரையாளர்களையும் ஏமாற்ற வேண்டும் என்ற ஆட்சியாளர்களின் எண்ணமும், சதியும் தான் காரணம் என்று குறிப்பிட்டார்

ஐந்தாண்டு கால ஆட்சியில் திமுக செய்தது எல்லாம் வானத்தை வில்லாய் வளைப்போம் என்று வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றுவதற்காகத்தான் என்று குறிப்பிட்டுள்ளார்

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in