

அமைச்சர் விளக்கம்
Minister Ma Subramanian's Explanation on Half Boiled Remarks : இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பறவை காய்ச்சல் எதிரொலியாக அதனை தடுக்கும் முன்னெச்சரிக்கையாக பாதி நிலையில் வேக வைத்த சிக்கன் போன்ற உணவுகள் தற்போது உண்ண வேண்டாம் என்றும் கூறியிருந்தார் தவிர ஹாஃப் பாயில் சாப்பிடக்கூடாது என்ற கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் .
H5N1 வைரஸ் தொற்று -வழிகாட்டு வழிமுறை
H5N1 வைரஸ் தொற்று இறந்த பறவைகளிடையேயே உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து சென்னையில் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளாக அரசு விரிவான வழிகாட்டு நெறிமுறை வெளியிட்டுள்ளது.
தடுப்பு நடவடிக்கை
H5N1 எனும் வைரஸானது பெரும்பாலும் பறவைகளிடமிருந்து பறவைகளுக்கே பரவுகிறது. ஆனால், பறவைகள் அதிகளவில் இறந்து கிடக்கும்போது, மனிதர்கள் அவற்றைக் கையால் தொட்டாலோ அல்லது கையாண்டாலோ அரிதாகவே மனிதர்களுக்கும் பரவக்கூடிய அபாயம் உள்ளது.எனவே அவற்றை தவிர்த்து கொள்ளும்படி கூறியுள்ளது .
பாதுகாப்பு அறிவுறுத்தல்
உங்கள் வீட்டின் சுற்றுப்புறத்தில் ஏதேனும் பறவை இறந்து கிடந்தால், உடனடியாக சுகாதாரத் துறைக்கோ அல்லது உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கோ (Food Safety Officers) தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது .அல்லது மாநகராட்சிக்கு தகவல்களை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
====