”புத்துயிர் பெற்ற அம்மா உணவகங்கள்” : தவெக அரசின் மறுசீரமைப்பு பணிகள் : வருவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு...!

தவெக அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக அம்மா உணவகங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
people visiting Amma Unavagams  increased significantly, measures taken by the TVK government
people visiting Amma Unavagams increased significantly, measures taken by the TVK governmentAI generated
2 min read

அம்மா உணவகங்கள்

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, தமிழகத்தில் மலிவு விலையில் 3 வேளையும் உணவு வழங்கும் ‘அம்மா உணவகங்கள்” தொடங்கப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன.

இதனால், லட்சக்கணக்கானோர் பசியாறினார். திமுக ஆட்சியில் இந்த திட்டம் தொடர்ந்தாலும், பெயரளவில் தான், வரவேற்பு இருந்தது. பல இடங்களில் அம்மா கேண்டீன்கள் பாழடைந்தன.

வாடிக்கையாளர்கள் வருகை குறைந்ததால், சில பகுதிகளில் உணவகங்கள் செயல்பாட்டில் சுணக்கம் ஏற்பட்டது.

அம்மா உணவகங்கள் புனரமைப்பு

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியின் வருகைக்கு பின் அம்மா உணவகங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக அம்மா உணவகத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் உயர்ந்து உள்ளது.

வருவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

தினசரி வருகை தருபவர்களின் எண்ணிக்கை 70,000 என்ற அளவிலிருந்து 1.04 லட்சமாக மிரள வைக்கும் வகையில் உயர்ந்துள்ளது.

சென்னையில் ஏழை, எளிய மற்றும் உழைக்கும் மக்களின் பசியைப் போக்கும் உன்னதத் திட்டமாக விளங்கும் அம்மா உணவகங்கள், தற்போது மீண்டும் தங்களின் பழைய பொலிவையும் மக்கள் செல்வாக்கையும் பெறத் தொடங்கியுள்ளன.

தினசரி வருகை 1.04 லட்சம்

அம்மா உணவகங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, தற்போது புதிய உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தரமான உணவு விநியோகம் காரணமாகத் தினசரி 1.04 லட்சமாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.

கொரோனா காலத்தில் உதவிய அம்மா உணவகங்கள்

சென்னை மாநகராட்சியின் கீழ் மொத்தம் 383 அம்மா உணவகங்கள் தற்பொழுது தங்கு தடையின்றி செயல்பட்டு வருகின்றன.

ஆரம்பக் காலகட்டங்களிலும், குறிப்பாகக் கோவிட்-19 பெருந்தொற்று ஊரடங்கு காலத்திலும், இந்த உணவகங்கள் லட்சக்கணக்கான மக்களுக்குக் பசியைப் போக்கின.

திமுக ஆட்சியில் குறைந்த வருகை

ஆனால், அதற்குப் பிறகு போதிய பராமரிப்பு இல்லாமை மற்றும் உணவின் தரம் சற்றுத் தொய்வடைந்ததன் காரணமாக, இங்கு வந்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது.

ஒரு கட்டத்தில் தினசரி வருகை தருபவர்களின் எண்ணிக்கை 70,000க்கும் கீழ் சரிந்தது.

முதல்வர் விஜய் அதிரடி

மக்களின் இந்த அத்தியாவசியத் தேவையை உணர்ந்த முதலமைச்சர் விஜய், அம்மா உணவகங்களின் உள்கட்டமைப்பை உடனடியாக மேம்படுத்தவும், சமையலுக்குத் தேவையான புதிய நவீன உபகரணங்களைக் கொள்முதல் செய்யவும் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

தரத்தில் சமரசம் கூடாது

ஏழை மக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் எக்காரணத்தைக் கொண்டும் குறையக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இந்த உத்தரவைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் இணை ஆணையர்கள் களத்தில் இறங்கினர்.

தரமான நிலையில் அம்மா உணவகங்கள்

சென்னை முழுவதும் உள்ள பல்வேறு அம்மா உணவகங்களுக்கு நேரில் சென்று அவர்கள் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டனர். உணவின் தரம், சமையலறை சுகாதாரம் மற்றும் பொதுமக்களின் கருத்துகளைத் தொடர்ந்து கண்காணித்து வந்ததன் விளைவாக, குறுகிய காலத்திலேயே உணவகங்களின் தரம் மிக உயர்வான நிலையை எட்டியுள்ளது.

நிதி ஒதுக்கீடு

உணவகங்களை நவீனமயமாக்கவும், பழுதடைந்த சமையல் பாத்திரங்களை மாற்றி புதிய உபகரணங்களை வாங்கவும் சுமார் 17.6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டன.

3,000 பேர் பணிபுரிகிறார்கள்

தற்போது இந்த உணவகங்களில் சுமார் 3,000 பணியாளர்கள், முக்கியமாக மகளிர் சுய உதவிக்குழுவினர், பணியாற்றி வருகின்றனர்.

அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்குத் தூய்மையான முறையில் உணவு வழங்கப்படுவதும் இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

=========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in