

தமிழக சட்டமன்ற தேர்தல்
Union Minister Piyush Goyal says, "NDA is going to sweep the elections and give a good government to the people of Puducherry and Tamil Nadu." : தமிழக சட்டமன்ற தேர்தல் 5 முனைப்போட்டியோடு தயாராகி வருகிறது. வாக்குப்பதிவுக்கு ஒருமாதமே இருக்கும் நிலையில், பரபரக்கிறது அரசியல் களம்.
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர், ராமதாஸ், சசிகலா தலைமையில் புதிய கூட்டணி என முன்னெப்போதும் இல்லாத அளவு தேர்தல் களம் விறுவிறுப்பாக இருக்கிறது.
திமுக கூட்டணி
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு ஒருசில கட்சிகளுக்கு முடிந்து விட்டாலும், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், தேமுதிகவிற்கு இன்னும் இழுபறி நீடிக்கிறது. தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டது.
அதிமுக கூட்டணி
அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இனி புதிய கட்சிகள் வர வாய்ப்பில்லை என்பதால், தொகுதிகளை இறுதி செய்ய வேண்டியது தான் பாக்கி.
சென்னையில் பியூஷ் கோயல்
இதற்காக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, தினகரன், அன்புமணி ஆகியோர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினர்.
இந்தநிலையில், பாஜக தமிழக பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் இன்று காலை சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் அவரை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இன்று மாலை பேச்சுவார்த்தை
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பியூஷ் கோயல், “ தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சு நடத்துவதற்காக வந்துள்ளேன். இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதிப்பங்கீடு பேச்சு நடைபெறும்.
அதிமுக கூட்டணி வெற்றி பெறும்
அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் அனைத்து கட்சியினரும் ஒரே குடும்பமாக பணியாற்றி வருகிறோம்.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். வளர்ந்த தேசத்துக்கு தமிழ்நாடு வளர்ந்த தமிழ்நாடு வழிவகுக்கும் என்று கூறினார்.
திமுக மீது அதிருப்தி
திமுக-காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். காங்கிரஸ் கூட்டணி ஒவ்வொரு மாநிலத்திலும் தோல்வியை சந்தித்து வருகிறது. தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்
எடப்பாடியே முதல்வர்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும் என்பதே, தமிழக மக்களின் விருப்பமாக உள்ளது. இன்று மாலை நடைபெறும் பேச்சுவார்த்தையில் எத்தனை தொகுதிகள் என்பதை இறுதி செய்து அறிவிப்போம்.
அனைவரும் திருப்தி அடையும் வகையில் தொகுதி பங்கீடு அமையும்” என்று பியூஷ் கோயல் உறுதிபடத் தெரிவித்தார்.
--------------