பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு வெளியீடு : 95.20 சதவீதம் பேர் தேர்ச்சி : மாணவர்கள் 93.19 சதவீதம், மாணவிகள் 97 சதவீதம்...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 98.97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.
Plus 2 exam results in Tamil Nadu, 98.97 percent of students have passed.
Plus 2 exam results in Tamil Nadu, 98.97 percent of students have passed.google
1 min read

பிளஸ் 2 பொதுத்தேர்வுகள்

தமிழகத்தில் மார்ச் 2ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வினை மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதியிருந்தனர்.

தேர்வு முடிவுகள் அறிவிப்பு

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏப்ரல் 6 முதல் 20ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் நிறைவடைந்த நிலையில் தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

இணைய தளங்கள் மூலம் ரிசல்ட்

tnresults.nic.in, dge.tn.gov.in, மற்றும் results.digilocker.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம்.

இணையதளத்தில் முடிவுகளைப் பார்க்க மாணவர்கள் தங்களின் தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்ய வேண்டும்.

குறுஞ்செய்தி மூலம் மதிப்பெண் விவரம்

மாணவர்களின் வசதிக்காக அவர்கள் பள்ளியில் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாகவும் மதிப்பெண் விவரங்கள் நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டன.

பிளஸ் 2 தேர்வில் மொத்தம் 7.53 லட்சம் மாணவர்கள் (95.20 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி

இதில் மாணவிகள் 4,06,167 பேர் (97 சதவீதம்). தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 3, 47, 527 பேர் (93.19 சதவீதம்). வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.

=================

logo
Thamizh Alai
www.thamizhalai.in