இளையராஜா இசை ஆராய்ச்சி மையம் : அக். 11ல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

அக்டோபர் 11-ல் சென்னை வரும் பிரதமர் மோடி பூந்தமல்லி மெட்ரோ சேவையைத் தொடங்கி வைத்து, ஐஐடியில் இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தைத் திறக்கிறார்.
PM Modi Chennai Visit: Metro Rail Launch and Ilaiyaraaja Music Research Centre Inauguration
PM Modi Chennai Visit: Metro Rail Launch and Ilaiyaraaja Music Research Centre Inaugurationsource:google
1 min read

PM Modi Chennai Visit: Metro Rail Launch and Ilaiyaraaja Music Research Centre Inauguration

பிரதமர் மோடியின் சென்னை வருகை

சென்னையில் பூந்தமல்லி - வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற அக்டோபர் 11-ஆம் தேதி சென்னை வருகிறார்.

மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைப்பது மட்டுமின்றி சென்னை ஐஐடி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.

பிரதமர் மோடியின் பயணத் திட்ட விவரங்கள்

  1. டெல்லியிலிருந்து சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 11.30 மணியளவில் பூந்தமல்லிக்குச் செல்கிறார்.

  2. பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கிவைத்து, மெட்ரோ ரயிலில் போரூர் வரை பயணம் மேற்கொள்கிறார்.

  3. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக சென்னை ஐஐடி வளாகத்துக்கு வருகிறார்.

  4. சென்னை ஐஐடி வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, அங்குள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

இளையராஜா இசை ஆராய்ச்சி மையம் திறப்பு

இறுதியாக ஐஐடி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தைப் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

பின்னர் தனது சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி புறப்படுகிறார்.

இளையராஜா இசை நிறுவனத்துடன் ஒப்பந்தம்

கடந்த 2024-ஆம் ஆண்டு சென்னை ஐஐடி ஆராய்ச்சி மையம் சார்பில் இசைஞானி இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இதற்காக இளையராஜாவின் இசை நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ”2026ல் ஸ்மித் மச்சார், 1986ல் உயிர்த்தியாகம் செய்த நீரஜா பானோட்” : இந்தியாவின் பெருமையை உயர்த்திய தீரர்கள்..!

========

logo
Thamizh Alai
www.thamizhalai.in