9 கோடி விவசாயிகள், 18,000 கோடி விடுவிப்பு : கோவையில் பிரதமர் மோடி

PM Modi Release 21st Installment of PM Kisan Samman Nidhi 2025 : கோவை வேளாண் மாநாட்டில் நாடு முழுவதும் 9 கோடி விவசாயிகளுக்கு 18,000 கோடி நிதியை பிரதமர் மோடி விடுவித்தார்.
PM Modi Releases 21st Installment of PM Kisan Samman Nidhi 2025 at Coimbatore South India Natural Farming Summit
PM Modi Releases 21st Installment of PM Kisan Samman Nidhi 2025 at Coimbatore South India Natural Farming SummitGoogle
1 min read

கோவையில் பிரதமர் மோடி

PM Modi Release 21st Installment of PM Kisan Samman Nidhi 2025 : ஒருநாள் பயணமாக கோவை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுநர் ரவி, அமைச்சர் மு.பெ. சுவாமிநாதன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர்கள் அவரை வரவேற்றனர்.

பொதுமக்கள் வரவேற்பு

அங்கிருந்து விழா நடைபெறும் கொடிசியா வளாகம் வரை, கார் மூலம் பயணித்த பிரதமருக்கு, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள், பாஜகவினர் அன்பான வரவேற்பு அளித்தனர்.

விவசாயிகளுடன் கலந்துரையாடல்

வெளாண் மாநாட்டை தொடங்கி வைத்த அவர், அங்கு அமைக்கப்பட்டு இருந்த அரங்குகளை பார்வையிட்டார். விவசாயிகள் வைத்திருந்த பொருட்களை பார்வையிட்ட அவர், அவை பற்றி கேட்டறிந்தார். விவசாய விஞ்ஞானிகளுடனும் பிரதமர் கலந்துரையாடினார். மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமருக்கு நினைவுப் பரிசுகளை விவசாயிகள் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

9 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2,000

நாடு முழுவதும் உள்ள 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ் 21வது தவணையாக(21st Installment of PM Kisan Samman Nidhi 2025) ரூ.18 ஆயிரம் கோடியை பிரதமர் விடுவித்தார். உடனடியாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு அவர்களின் வங்கி கணக்குகளில் தலா 2 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது.

மூன்று நாட்கள் வேளாண் மாநாடு

வேளாண் மாநாட்டில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், இயற்கை வேளாண் விஞ்ஞானிகள், இயற்கை வேளாண் பொருட்களை விநியோகம் செய்பவர்கள், விற்பனையாளர்கள் பங்கேற்றுள்ளனர். மூன்று நாட்கள் இந்த மாநாடு நடைபெறுகிறது.

முன்னதாக இந்த மாநாடு தொடர்பாக தமது எக்ஸ் தளப் பதிவில் தமிழில் பதிவிட்ட பிரதமர் மோடி, “தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்பதற்காக கோயம்புத்தூர் செல்கிறேன். ஏராளமான விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இந்தத் துறையுடன் தொடர்புடைய புதிய கண்டுபிடிப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள். நிலையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த, ரசாயன பயன்பாடு அல்லாத வேளாண் நடைமுறைகளில் கவனம் செலுத்துவது, பாராட்டத்தக்க விஷயம்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

===================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in