தயாரானது ”மதுரை எய்ம்ஸ்”: பிப் 28ல் அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

PM Modi Inaugurate Madurai AIIMS Hospital Opening Date 2026 : மதுரையில் அமைக்கப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க இருப்பதாக, தகவல் வெளியாகி இருக்கிறது.
PM Narendra Modi Inaugurate Madurai AIIMS Hospital Opening Date on 20th February 2026 Here is Madurai AIIMS Status in Tamil
PM Narendra Modi Inaugurate Madurai AIIMS Hospital Opening Date on 20th February 2026 Here is Madurai AIIMS Status in TamilSource : Madurai AIIMS - Google
1 min read

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை

PM Modi Inaugurate Madurai AIIMS Hospital Opening Date 2026 : மதுரை தோப்பூரில் தமிழகத்தின் முதல் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது. 222 ஏக்கர் பரப்பளவில், சுமார் ₹2,021 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் ஒரு மத்திய அரசின் உயர்தர மருத்துவக் கல்வி மற்றும் சிகிச்சை நிறுவனமாகும்.

2019ல் அடிக்கல்

மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டு 2019ல் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பணிகள் தொய்வாக நடைபெற்று வருவதாகவும், போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

2027ல் பயன்பாட்டிற்கு வரும்

இந்த நிலையில், எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் கட்டுமான பணிகள் முழு வீச்சில் தொடங்கப்பட்டன.

2027 பிப்ரவரிக்குள் முழுமையாக பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தற்காலிகமாக ராமநாதபுரத்தில் இயங்கி வருகிறது.

28ம் தேதி மோடி திறந்து வைக்கிறார்

இந்த நிலையில் எய்மஸ் மருத்துமனையில் ஒரு ப்ளாக் மட்டும் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி வரும் 28ம் தேதி திறந்து வைக்க உள்ளார்.

முதற்கட்டமாக கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக எய்ம்ஸ் தலைவர் தெரிவித்தார்.

என்டிஏ பொதுக்கூட்டம்

அன்றைய தினம் மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்டிஏ மேடையில் பிரேமலதா?

இந்த பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றால், பிரேமலதா விஜயகாந்த் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.

திமுகவின் விமர்சனத்திற்கு பதிலடி

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் தொடர்பாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மத்திய பாஜக அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தன. கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலிலும் திமுக கூட்டணி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையி்லும் விரைவில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தின் முதல் ப்ளாக்கை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

===============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in