”அன்புமணிக்கு திமுக செக்” : தனித்து போட்டியிட ராமதாசுக்கு அட்வைஸ்

PMK ADMK Alliance 2026 : அன்புமணி தரப்பு செக் வைக்கும் வகையில், ராமதாஸ் தரப்பை தனித்து போட்டியிட வைக்க திமுக முயன்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
PMK ADMK Alliance 2026 DMK is trying to make Ramadoss faction contest separately, in order put check to Anbumani faction
PMK ADMK Alliance 2026 DMK is trying to make Ramadoss faction contest separately, in order put check to Anbumani factionSource : Google
2 min read

ராமதாஸ் vs அன்புமணி

PMK ADMK Alliance 2026 : பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ், அன்புமணி இடையேயான மோதல், அக்கட்சியை 2 ஆக பிரித்து இருக்கிறது. இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன், தாங்களே உண்மையான பாமக என்று மல்லுக் கட்டுகிறார்கள். மாம்பழ சின்னம் யாருக்கு என்ற வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

மாம்பழம் யாருக்கு?

தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவை பொருத்தே, யார் உண்மையான பாமக என்று தெரிய வரும். தேர்தலுக்கு முன்பு இது சாத்தியம் இல்லை என்றால், மாம்பழ சின்னம் முடக்கப்பட்டு, இருவருக்கும் தனிச் சின்னங்கள் கொடுக்கப்படலாம்.

அதிமுக கூட்டணியில் அன்புமணி

அதிமுக கூட்டணியில் இடம்பெற்று விட்ட அன்புமணிக்கு அவர் கேட்டும் தொகுதிகளில், ஒரு ராஜ்ய சபா சீட் கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அன்புமணி முந்திக் கொண்டு விட்டதால், ராமதாஸ் திமுக அல்லது தவெக கூட்டணிக்கு செல்ல வேண்டிய நிலைதான் உள்ளது.

கதவை சாத்திய திமுக

ராமதாஸ் தரப்பு திமுக கூட்டணியில் இணைய பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எதிர்ப்பு காரணமாக திமுக கதவை சாத்தி விட்டதாக தெரிகிறது.

தவிக்கும் ராமதாஸ்

ராமதாஸ் தரப்பு திமுக கூட்டணியில் இணைய பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எதிர்ப்பு காரணமாக திமுக கதவை சாத்தி விட்டது.

தவெகவுக்கு செல்லத் தயக்கம்

எனவே,நடிகர் விஜயின் தவெகவுடன் ராமதாஸ் தரப்பு, கூட்டணி பேச்சு நடத்தியது. ஆனால், பட்டியலின மக்களின் ஆதரவை இழக்க நேரிடும் என பலர் எச்சரித்ததால், தவெகவும் ராமதாஸை கூட்டணியில் சேர்க்க தயங்குவதாக கூறப்படுகிறது. இதனால், எந்த கூட்டணியிலும் சேர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் ராமதாஸ்.

திமுகவை எதிர்க்கும் அன்புமணி

திமுகவை கடுமையாக எதிர்த்து வரும் அன்புமணி, அரசின் தோல்விகளை பட்டியலிட்டு, அறிக்கைகளாக வெளியிட்டு தலைவலி கொடுத்து வருகிறார். சட்டமன்ற தேர்தலில், அவர் தரப்பு கணிசமான இடங்களில் வெற்றி பெற்றால், அது திமுகவை நெருக்கடியாக அமைந்து விடும்.

காய் நகர்த்தும் திமுக

எனவே, அன்புமணியின் வெற்றியை தடுக்கும் வகையில், ராமதாஸை குறைந்தது 30 தொகுதிகளில் தனித்து போட்டியிட வைக்க, திமுக காய் நகர்த்தி வருகிறது.

அப்படி செய்தால், ராமதாஸ் விரும்பும் ஒன்றிரண்டு நபர்களை வெற்றி பெற வைக்கிறோம் எனவும் திமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக தைலாபுரம் வட்டாரங்கள் கூறுகின்றன.

ராமதாஸ் தரப்புக்கு திமுக உறுதி

ராமதாஸ் தரப்பில் அவரது மகள் ஸ்ரீகாந்தி, பேரன் முகுந்தன் களத்தில் நிறுத்தப்படலாம். அவர்களை திமுக வெற்றி பெற வைக்கும் எனத் தெரிகிறது.

அவர்கள் மட்டுமின்றி ஜி.கே. மணி, அருள் போன்றோரும் திமுக ஆதரவாளர்கள் என்பதால், அவர்களும் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.

அன்புமணியை தோற்கடிக்க ராமதாஸ் கங்கணம்

தேர்தலில் சரியான கூட்டணியில் இடம்பெற முடியா விட்டாலும், தனக்கு எதிராக செயல்பட்டு வரும் அன்புமணி தரப்பை தோற்கடிக்க ராமதாஸ் முடிவு எடுத்து விட்டதாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அன்புமணி நிறுத்தும் வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் ராமதாஸ்.

அதிமுக கூட்டணிக்கு சிக்கல்

அதிமுக கூட்டணியில் அன்புமணிக்கு ஒதுக்கும் தொகுதிகள் உட்பட 30 தொகுதிகளில், தன் தரப்பு வேட்பாளர்களை நிறுத்தி அந்தக் கூட்டணியை தோற்கடிப்பது குறித்து ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்’’ என்கிறனர்.

வாக்குகளை பிரிக்க ராமதாஸ் வியூகம்

வட மாவட்டங்களில் வன்னியர் பெரும்பான்மை உள்ள தொகுதிகளில் தனித்து தனது ஆதரவாளர்களை களமிறக்கி போட்டியிட திட்டமிட்டுள்ளதன் மூலம் அன்புமணி தரப்பு போட்டியிடும் தொகுதிகளில் வாக்குகளை பிரிக்க முயல்வதாக கூறப்படுகிறது.

அடித்து ஆடப்போகும் ராமதாஸ்

இது திமுகவின் வெற்றிக்கு வழி வகுப்பதோடு, ராமதாஸ் ஆதரவாளர்கள் சிலர் வெற்றி பெற உதவும். இதன் மூலம் அன்புமணியின் செல்வாக்கு சரியும் என்கின்றனர். ராமதாஸ் தரப்பினர்.

எனவே, சட்டமன்ற தேர்தலில் வட மாவட்டங்களில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் போட்டி கடுமையாக இருக்கும் என்றே தெரிகிறது.

===============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in