
ராமதாஸ் அரசியல் பயணம் :
PMK Ramadoss Admitted in Apollo Hospital: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சமீப காலமாக மாநாடு, பொதுக்கூட்டம் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை உள்ளிட்ட கட்சி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார்.
ராமதாஸ் பரிசோதனை :
இதய நோயால் பாதிக்கப்பட்டு இவருக்கு முன்கூட்டியே அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று ராமதாஸ் பரிசோதனை செய்து வருவார். இந்நிலையில், டாக்டர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், அவருக்கு இன்று ஆஞ்சியோ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து, டாகடர் ராமதாஸ்(Ramadoss Health Condition) அவர்கள் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.
மருத்துவ நிர்வாகம் தகவல் :
இந்நிலையில், டாக்டர் ராமதாஸ் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது(Ramadoss Health Update). இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், வழக்கமான இதய பரிசோதனைக்காக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : TJS George: காலமானார் TJS. ஜார்ஜ்! இவருக்கு இப்படி ஒரு சரித்திரமா?
கட்சி தலைவர்கள் நலன் விசாரிப்பு :
பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்தது வெளியே தெரியவந்த நிலையில், அவரின் உடல்நலம் குறித்து அவரது தொண்டர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் நலம் விசாரித்து வருகின்றனர். அதனடிப்படையில், முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்(CM MK Stalin Visit Ramadoss). அவர் ஓரிரு நாட்களில் வெளி வரவிருப்பதாக செய்திகள் வெளி வந்த நிலையில், அவரது கட்சி தொண்டர்கள் அவரது உடல்நலம் பேணி சுவாமி தரிசனம் செய்தும், நலம் விசாரித்தும் வருகின்றனர்.