
தி. ஜே. எஸ். ஜார்ஜ் வரலாறு :
Veteran Journalist TJS George Passes Away : தி. ஜே. எஸ். ஜார்ஜ் எனப்படும் தைல் ஜேக்கப் சோனி ஜார்ஜ் (பிறப்பு 7 மே 1928) இவர் ஓர் இந்திய எழுத்தாளரும் மற்றும் வாழ்க்கை வரலாற்றாசிரியருமாவார்(Thayil Jacob Sony George). இந்திய மாநிலமான கேரளாவில், நீதியரசர் தெய்ல் தாமஸ் ஜேக்கப் மற்றும் இல்லத்தரசியான சச்சியாமா ஜேக்கப் ஆகியோருக்கு எட்டு குழந்தைகளில் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். பின் நாட்களில் பத்திரிக்கைத்துறையில் ஆர்வம் கொண்ட இவர், தனது முழு திறமையும் வெளிக்காட்டி பல்வேறு இதழ்களில் பணிபுரிந்து, மூத்த பத்திரிக்கையாளர் எனும் பெயரை பெற்றார். இவர் தனது மனைவி அம்முவுடன் பெங்களூரு மற்றும் கோயம்புத்தூரில் வசித்து வந்த இவருக்கு ஒரு மகள், மகன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
பத்திரிக்கை துறை வளர்ச்சி :
இளங்கலை ஆங்கிலத்தில் பட்டம் பெற்ற இவர் 1950 ஆம் ஆண்டு அப்போதைய பாம்பேயில் 'Free Press Journal'-ல் பத்திரிகையாளராகத் தன்னுடைய பயணத்தைத் தொடங்கி இருக்கிறார்.. மேலும்,தீவிர அரசியல் கட்டுரையாளர் மற்றும் சுயசரிதை எழுத்தாளர் என சர்வதேச அளவில் தனித்துவத்தை காட்டிய இவர், 'The New Indian Express' பத்திரிகையின் தலையங்க கட்டுரையாளராகவும், ஆலோசகராகவும் பணியாற்றினார். இதைத்தொடர்ந்து, இந்தியன் எக்ஸ்பிரசில் தனது பத்திகள் மூலம் சமூக அநீதி, ஊழல் மற்றும் அரசியல் அராஜகங்களுக்கு எதிரான தனது போராட்டத்தை தொடர்ந்து, ஒரு ஆசிரியர், கட்டுரையாளர், எழுத்தாளர் மற்றும் நித்திய சொற்களஞ்சியம் என்பதைத் தவிர, இவர் நீண்டகாலமாக சீனக் கண்காணிப்பாளராகவும் இருந்து வருகிறார். 10 வருட இடைவெளிக்குப் பிறகு, 2008 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் தயாரிப்புகளைக் காண மீண்டும் சீனாவுக்குச் சென்று நவீன சீனாவைப் பற்றி தொடர் கட்டுரைகளை எழுதினார்.
புத்தகங்களின் தாக்கம்
தொடர்ந்து இதழியல் துறையில் ஆர்வம் காட்டிய இவர், தனது பதிவுகளை அகளப்படுத்தி, இந்திய அரசியல்வாதி மற்றும் சுதந்திரப் போராளியுமான கிருஷ்ண மேனன் பற்றிய சுயசரிதையை எழுதினார். பாடங்கள் போதன் ஜோசப்பின் கதை, சைட்லைட்ஸ் செல்வி மற்றும் எ லைஃப் இன் மியூசிக், இதில் இந்தியாவின் மிகவும் மதிப்பிற்குரிய இசைக்கலைஞர்களில் ஒருவரான எம்.எஸ். சுப்புலட்சுமி என்பவரின் கதையைச் சொல்கிறார். மேலும், ஜெயா: ஒரு நம்பமுடியாத கதை என்பது முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை மற்றும் நிகழ்வுகளை சுவாரஸ்யமான தலைப்புகள் மற்றும் சிறுகுறிப்புகளுடன் கூடிய புகைப்படங்களின் தொகுப்பாகும்
விருதுகள்
இலக்கிய பணிகளில் அதீத ஆர்வம் கொண்ட இவர், தொடர்ந்து இதழியில் மற்றும் பத்திரிக்கத்துறை என இவரது எழுத்துப்பணியின் தாக்கம் அனைவரையும் நிலைகுழைய வைத்துள்ளது. இந்நிலையில், இலக்கியதுறையில் இவர் ஆற்றிய பணிக்கு எந்த பெரும் விருதுகள் கொடுத்தாலும் ஈடாகாது, அப்படி இருக்கையில், 2001இல் பாட்ரிகா அகாடமி விருது, 2005இல் முகமது கோயா பத்திரிகை விருது, 2007இல் இராஜ்யோத்சவ விருது, 2008இல் பசீர் புரஸ்காரம் விருது,2011இல் இந்திய அரசின் பத்ம பூஷண் விருது, 2013இல் ஆழிக்கோடு விருது, 2017இல் கமலா சுராய்யா விருது மற்றும் 2017இல் கேசரி ஊடக விருது என இவரின் விருது குவியல் எண்ணிலடங்காதது.
விடைபெற்றார் ஜார்ஜ்
1928 ஆம் ஆண்டு மே7 ஆம் தேதியன்று பிறந்து இவர் படைத்து உருவாக்கிய சாம்ராஜ்ஜியம் இன்று இவரைப்போல் வரும் அனைத்து இலக்கியவாதிகளுக்கும் நிழல் கொடுத்து வருகிறது. ஜார்ஜ் என்றால் சாதனையாளர் என்பதை தாண்டி, சரித்திரக்காரர் அதுவும் இலக்கியத்திலும், இதழியல் துறையில் இவர் தான் என்று கூட கூறலாம். இந்நிலையில், தொடர்ந்து சாதனையை குவித்த இவர், அக்டோபர் 4 ஆம் தேதி 2025 ஆம் ஆண்டு(TJS George Death) உடல்நலக்குறைவின் காரணமாக இயற்கை எய்தினார்.
மேலும் படிக்க : La. Ganesan Passed Away : நாகலாந்த் ஆளுநர் இல. கணேசன் காலமானார்
ஆனால், அவரின் இலக்கியம் இன்னும் மூச்சு விட்டு, முண்டியடித்து கொண்டு உயிரோடு தான் இருக்கிறது. தேடுவோம் இந்தியாவில் அல்ல உலகத்திலும் சேர்த்து இவரைப்போல் இன்னொரு ஜார்ஜ்ஜை.
======