பொய் கூறி மாம்பழச் சின்னம்: அன்புமணிக்கு ராமதாஸ் கடும் எச்சரிக்கை

Ramadoss About Anbumani on Mango Symbol : பிகாரில் போட்டியிடுவதாக கூறி மாம்பழ சின்னத்தை அன்புமணி பெற்றதாக, ராமதாஸ் குற்றம்சாட்டி இருக்கிறார்.
Ramadoss accused Anbumani  getting mango symbol by claiming to contesting in Bihar
Ramadoss accused Anbumani getting mango symbol by claiming to contesting in Bihar
1 min read

பிளவுபட்டு நிற்கும் பாமக :

Ramadoss About Anbumani on Mango Symbol : பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் - அன்புமணி இடையேயான மோதல், கட்சியை 2 ஆக உடைத்து இருக்கிறது. யாருக்கு அதிகாரம், கட்சியின் சின்னம் யாருக்கு என்பது இதுவரை அன்புமணி தரப்புக்கே இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், உண்மையான பாமக தன் பக்கமே இருப்பதாகவும், நிச்சயம், தனது முடிவின்படி தான் கட்சி இயங்கும் என்றும் ராமதாஸ் நம்பிக்கையுடன் தெரிவித்து வருகிறார். ராமதாசை பகிரங்கமாக விமர்சிப்பதை அன்புமணி தவிர்த்து வந்தாலும், கட்சியை விட்டுக் கொடுக்க அவர் ஒருபோதும் தயாராக இல்லை. தந்தை - மகன் மோதல் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சோர்வடைய செய்து இருக்கிறது.

போலியாக சுற்றும் ஒரு கும்பல் :

இந்தச்சூழலில் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் ராமதாஸ், "நாங்கள்தான் பாமக எனக் கூறிக்கொண்டு ஒரு கும்பல் சுற்றுகிறது. பிகாரில் போட்டியிடுவதாக போலி ஆவணங்கள் கொடுத்து மாம்பழம் சின்னம் பெற்ற அவர்களின் வேஷம் கலைக்கப்படும். பீகாரில் போட்டி என கூறிய அன்புமணி தென்கொரியா, மொரீசியஸ், ஜப்பானிலும் போட்டியிடுவார்.

பாமக எங்களுக்கே சொந்தம் :

அன்புமணியை என்றைக்கு கட்சியை விட்டு நீக்கினோமோ அன்றைக்கே எல்லாம் முடிந்து விட்டது; பாமக எங்களுக்குத்தான் சொந்தம் என சொல்வது வெட்கமாக உள்ளது.கட்சி தொடர்பான ஆவணங்களை தலைமை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளோம்; பை, பையாக பொய் வைத்துக் கொண்டு பேசுவோரின் வேஷம் கலைந்துவிட்டது.

உண்மையாகவே நான் 46 வருஷம் ஓய்வின்றி உழைத்து கட்சியை வளர்த்து இருக்கிறேன்.

மேலும் படிக்க : Anbumani : தமிழக அரசை நோக்கி கேள்வி எழுப்பும் அன்புமணி..!

வருந்தும் அளவு நடவடிக்கை எடுப்போம் :

ஏன் பொய் சொன்னோம் என்று வருந்தும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்போகிறோம். டிசம்பர் முதல் வாரத்தில் 10.5% இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தப்படும்," இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார். ஏற்கனவே அன்புமணி சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் ராமதாஸ் போட்டி போராட்டம் அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in