
முருகன் மாநாட்டு மலர் விற்பனை :
Anbumani Ramadoss on CM MK Stalin : வடபழனியில் உள்ள முருகன் கோவிலில் பக்தர்களிடம் முருகப் பெருமான் வரலாறு என்று, ரூ.2,700 மதிப்புள்ள மலர் கட்டாயப்படுத்தி விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கட்டாயமாக மாநாட்டு மலர் விற்பனை :
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? பழநி முருகன் கோயிலில் வழிபாடு நடத்தச் செல்லும் பக்தர்களிடம் முருகப் பெருமான் வரலாறு என்று கூறி, ரூ.2700 விலை கொண்ட முருகன் மாநாட்டு மலர் கட்டாயமாக விற்பனை(Palani Murugan Manadu Flower Sale) செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
ஸ்டாலின், உதயநிதி புகைப்படங்கள் :
அதைவிடக் கொடுமை என்னவென்றால், முருகன் வரலாறு என்று கூறி விற்பனை செய்யப்படும் நூலின் பெரும்பாலான பக்கங்களில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரின் கருத்துகளும், அவர்களின் புகைப்படங்களும் நிறைந்திருப்பது தான்.
முருகன் பெயரில் ஸ்டாலின் புகழ் பாடுவதா? :
முருகன் வரலாறு என்ற பெயரில் ஸ்டாலின் புகழ் பாடப்படுவதைக் காணும் போது அவர் (ஸ்டாலின்) எப்போது முருகராக மாறினார்? என்ற வினா எழுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். திராவிட ஆட்சியாளர்களின் அகராதியில் ஆண்டவர்களை ஆள்பவர்களே உயர்ந்தவர்கள் என்று எழுதப்பட்டிருப்பது அவர்களுக்கு தெரியாது” இவ்வாறு அந்த அறிக்கையில் அன்புமணி(Anbumani Statement) தெரிவித்துள்ளார்.
=================