கடலில் கலக்கும் 10 டிஎம்சி காவிரி நீர் : திமுக அரசுக்கு கண்டனம்

Anbumani on Mettur Dam : மேட்டூர் அணையில் இருந்து தினமும் திறந்து விடப்படும் தண்ணீர் யாருக்கும் பயன்படாமல் கடலில் வீணாக கலப்பபாதை தடுக்க இயலாமல் திமுக அரசு இருப்பதாக அன்புமணி குற்றம்சாட்டி உள்ளார்.
PMK Leader Anbumani Condemns DMK Government on Mettur Dam Water Wastage
PMK Leader Anbumani Condemns DMK Government on Mettur Dam Water Wastagehttps://x.com/search?
1 min read

மேட்டூர் அணை, உபரிநீர் திறப்பு :

Anbumani on Mettur Dam Water : கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீரால் நடப்பாண்டில், மேட்டூர் அணை 4வது முறையாக நிரம்பியது. அணைக்கு வரும் ஒரு லட்சம் கனஅடி உபரி நீரும் அப்படியே காவிரியில் திறந்து விடப்படுகிறது. இதில் குறிப்பிட்ட அளவு நீர் யாருக்கும் பயன்படாமல் வங்கக் கடலில் கலக்கிறது.

கடலில் கலக்கும் 10 டிஎம்சி தண்ணீர் :

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததைத் தொடர்ந்து அணையிலிருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 1.26 லட்சம் கன அடிக்கும் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் குறுவைப் பயிர்களுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைத்துள்ளது. நீர் நிலைகளும் நிரம்பியிருப்பதால் பாசனத்திற்கான தண்ணீரின் தேவை குறைந்து விட்ட நிலையில், அணையில் இருந்து தினமும் திறந்து விடப்படும் நீரில் சுமார் 10 டிஎம்சி நீர் யாருக்கும் பயன்படாமல் வீணாக கடலில் கலக்கும்(Mettur Dam Water) நிலை உருவாகியுள்ளது.

தடுப்பணைகளை கட்ட தயக்கம் ஏன் :

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வாய்ப்பும், நில அமைப்பும் சரியாக உள்ள இடங்களில் தடுப்பணைகளை கட்டுவதன் வாயிலாகவும், காவிரியில் வரும் உபரிநீரை சேமிக்கும் வகையில் ஏரிகள் மற்றும் குளங்களுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்துவதன் வாயிலாகவும் ஒரே நேரத்தில் 25 முதல் 30 டிஎம்சி தண்ணீரை சேமித்து வைக்க முடியும். ஆனால், பாசனக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் அக்கறை இல்லாத தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மறுக்கிறது.

குவாரிகள் அமைத்து மணல் கொள்ளை :

எங்கெல்லாம் தடுப்பணைகளை கட்ட வேண்டுமோ அங்கெல்லாம் மணல் குவாரிகளை அமைத்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. இதனால், அந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைதல், கடலை ஒட்டிய பகுதிகளில் கடல் நீர் உள்புகுந்து நிலத்தடி நீரை பாழ்படுத்துதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதும், மணல் குவாரிகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதும் மணல் கொள்ளையை மட்டுமே மகத்தான கொள்கையாகக் கொண்ட திராவிட மாடல் அரசு உள்ளது.

மேலும் படிக்க : சாதிவாரி கணக்கெடுப்பு, ’தவறை உணர்வாரா ஸ்டாலின்’ : அன்புமணி கேள்வி

திமுக அரசு திருந்த வேண்டும் :

திராவிட மாடல் அரசு இனியாவது திருந்தி வேண்டும். மணல் கொள்ளைக்கு முக்கியத்துவம் தருவதை விடுத்து வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பணைகளைக் கட்டுதல், நீர்நிலைகளை இணைத்து கொள்ளளவை அதிகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை ஓரளவாவது தடுக்க முடியும்” இவ்வாறு அன்புமணி(Anbumani) கேட்டுக் கொண்டுள்ளார்.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in