3 ஆண்டுகளில் 217 குழந்தைகள் படுகொலை: திமுக ஆட்சி,விளாசும் அன்புமணி

Anbumani Ramadoss Slams DMK on Rameswaram Girl Murder : திமுக ஆட்சியில் சமூக விரோதிகளை தவிர வேறு யாருக்கும் பாதுகாப்பில்லை என்று, அன்புமணி கடுமையாக சாடியிருக்கிறார்.
PMK Leader Anbumani Ramadoss strongly criticized DMK government on Rameswaram Girl Murder News in Tamil
PMK Leader Anbumani Ramadoss strongly criticized DMK government on Rameswaram Girl Murder News in TamilGoogle
2 min read

12ம் வகுப்பு மாணவி படுகொலை

Anbumani Ramadoss Slams DMK on Rameswaram Girl Murder : இராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த மாணவி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த12-ஆம் வகுப்பு மாணவி ஷாலினி அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் என்ற மனித மிருகத்தால் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். மாணவி ஷாலினியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவிக்கு தொல்லை கொடுத்த இளைஞர்

இராமேஸ்வரத்தை அடுத்த சேராங்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஷாலினியை அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் என்பவர் தம்மை காதலிக்கும்படி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். ஆனால், அவரைக் காதலிக்க ஷாலினி மறுத்து விட்டதால் ஆத்திரமடைந்த முனியராஜ், இன்று காலை மாணவி ஷாலினி பள்ளிக்கு செல்லும் வழியில் மறித்து கத்தியால் குத்தி படுகொலை செய்திருக்கிறார்.

தொடர்ந்து பாலியல் சீண்டல்

பள்ளி செல்லும் மாணவிகளும், அலுவலகம் செல்லும் இளம்பெண்களும் தொடர்ந்து பாலியல் சீண்டல்களுக்கு ஆளாவதாலும், காதல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்படுவதாலும் பள்ளி மற்றும் அலுவலக நேரங்களில் பேருந்து நிறுத்தங்களிலும், பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் காவல்துறை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

திமுக அரசே பொறுப்பு

அதை செவிமடுக்க திமுக அரசு தவறியதன் விளைவாகத் தான் ஓர் அப்பாவி மாணவி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட எவருக்கு பாதுகாப்பில்லாத நிலை தான் நிலவி வருகிறது.

சமூக விரோதிகள் பாதுகாப்பாக உள்ளனர்

ஆளுங்கட்சியினருக்கு துணை போகும் சமூக விரோதிகள் மட்டும் தான் இந்த ஆட்சியில் மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றனர். திமுக ஆட்சியில் எத்தகைய கொடூர குற்றங்களை செய்தாலும் தப்பி விடலாம் என்ற துணிச்சல் தான் இத்தகைய கொலைகளுக்கு காரணம்.

3 ஆண்டுகள் - 217 குழந்தைகள் படுகொலை

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2021, 2022, 2023 ஆகிய 3 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 217 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களில் 7 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 60.66 விழுக்காடும், போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 52.30 விழுக்காடும் அதிகரித்துள்ளன. இது தான் திமுக ஆட்சியின் சாதனை ஆகும்.

ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குக

இராமேஸ்வரத்தில் மாணவி ஷாலினியை கொடூரமாக படுகொலை செய்த முனியராஜை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். மாணவி ஷாலினியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். திமுக ஆட்சியின் எஞ்சியுள்ள சில வாரங்களிலாவது பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக நடமாடும் சூழலை உருவாக்க வேண்டும்” என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in