87% வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை:’விடியல் எங்கே’ அன்புமணி கேள்வி

Anbumani on DMK Election Promises : 99 சதவீத வாக்குகுறுதிகளை நிறைவேற்றி விட்டதாக பொய் சொல்லும் திமுக, உண்மையில் 87 சதவீத வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை என்று அன்புமணி குற்றம்சாட்டி இருக்கிறார்.
Anbumani Ramadoss on DMK Election Promises
Anbumani Ramadoss on DMK Election Promises
2 min read

’விடியல் எங்கே’ ஆவணம் வெளியீடு :

Anbumani Ramadoss on DMK Election Promises : திமுகவின் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள் குறித்த 'விடியல் எங்கே' எனும் ஆவணத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். அப்போது பேசிய இவர், ” இந்த ஆவணத்தில் திமுகவினர் அளித்த வாக்குறுதிகள் அனைத்து பொய் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்து இருக்கிறோம். இந்த குற்றச்சாட்டுகளில் பொய் கிடையாது. கடந்த சட்டசபை தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் அவர்கள் சொன்னதை தான் வெளியிட்டு இருக்கிறோம்.

தமிழகத்தில் விடியல் இல்லை :

தமிழகத்தில் எங்கேயும் விடியல் இல்லை என்று இந்த ஆவணம் மூலம் நிரூபித்துள்ளோம். தமிழகம் இருண்டு கிடக்கிறது. மற்ற கட்சிகள் எல்லாம் திமுக பொய் வாக்குறுதிகள் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் இதை புத்தகம் வடிவில் வெளியிட்டுள்ளோம். ஒரு பொய்யைக் கூட நாங்கள் சொல்லவில்லை. பொய்யை சொன்னது திமுக தான் என்று இந்த ஆவணங்கள் மூலம் நிரூபித்து இருக்கிறோம். இதை தமிழக மக்கள் படிக்க வேண்டும்.

பொய், பொய் வாயை திறந்தால் பொய் :

திமுக மக்களுக்கு கொடுத்தது ஏமாற்றம் மட்டுமே. பொய், ஏமாற்றம், பித்தலாட்டம், ஊழல், நிர்வாக சீர்கேடுகள். பொய், பொய்.. வாயைத் திறந்தால் பொய்யை தவிர வேறு எதுவும் கிடையாது. தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்தது 505 வாக்குறுதிகள், அதில் முழுமையாக நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் 66. அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளும் 66. 373 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

திமுகவின் கோயபல்ஸ் பிரசாரம் :

ஆனால் கோயபல்ஸ் பிரசாரம் போன்று 98 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக பொய் கூறி வருகிறது. தமிழக மக்கள் அவ்வளவு ஏமாளிகளா? 505ல் 439 வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. அவர்கள் நிறைவேற்றியது சதவீத அடிப்படையில் பார்த்தால் 12.94 சதவீதம் தான். அப்படி என்றால் 87 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவே இல்லை.

மாநில சுயாட்சி, தமிழ் வளர்ச்சியில் அளித்த 12 வாக்குறுதிகளில் 8 நிறைவேற்றப்படவில்லை. மாநில சுயாட்சி தமிழ் என்ற ஒன்றும் மட்டும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. 3 வாக்குறுதிகள் அரைகுறை. இந்தியாவில் பல மாநிலங்களில் கொண்டு வரப்பட்ட சேவை பெறும் உரிமை சட்டம் தமிழகத்தில் இருந்தால் உங்களுடன் ஸ்டாலின் முகாம் என்பது தேவையே கிடையாது.

மேலும் படிக்க : Anbumani : மு.க.ஸ்டாலின் மன்னிப்புக்கேட்க வேண்டும் : அன்புமணி

காற்றில் பறந்த வாக்குறுதிகள் :

4 முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற முதல்வர் ஸ்டாலின் எத்தனை ஆயிரம் முதலீடு கொண்டு வந்துள்ளார்? நீட் தேர்வு ரத்து என்று முதல்வரும், துணை முதல்வரும் தெருத்தெருவாக சொன்னார்கள். ஒரு வாரத்தில் ரத்து என்றார்கள். திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் ஒரேயொரு மருத்துவக்கல்லூரி கூட தொடங்கப்படவில்லை”

விவாதிக்க நான் தயார், நீங்க தயாரா? :

இவ்வாறு கூறிய அன்புமணி, ஆவண புத்தகத்தில் எந்த பொய்யும் இல்லை, இது குறித்து விவாதம் நடத்த முதல்வரோ, திமுக.வினரோ வரலாம். நான் தயாராக இருக்கிறேன்” என்றார்.

===========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in