மேகேதாட்டு அணை விவகாரம் : விழிப்புணர்வு நடைப்பயணம் : லோகோ வெளியிட்டு அன்புமணி அழைப்பு...!

மேகே​தாட்​டு​வில் அணையை ஏன் கட்​டக்​கூ​டாது என்ற காரணங்​களை குறிப்​பிட்​டு, பாமக தலை​வர் அன்​புமணி சமீபத்​தில் சமூக வலை​தளங்​களில் வீடியோ வெளியிட்டு இருந்தார்
PMK leader Anbumani recently released  videosocial media outlining the reasons why dam should not be built Mekedatu.
PMK leader Anbumani recently released videosocial media outlining the reasons why dam should not be built Mekedatu. google
1 min read

மேகேதாட்டு அணை விவகாரம்

கர்நாடக மாநிலம்  காவிரி​யின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்​தில் அணை கட்ட கர்​நாடக அரசு தீவிரம் காட்டி வரு​கிறது. இதற்கு தமிழகத்​தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்​ளது.

வழக்கமான தண்ணிர் திறப்பு இல்லை, அதிர்ச்சியில் டெல்டா விவசாயிகள்

வழக்கமாக ஜீன் மாத 15 போல் தமிழ்நாட்டின் குறுவை சாகுபடிக்காக திறக்கப்படும் தண்ணீர் இந்த ஆண்டு திறக்கப்படவில்லை இது டெல்டா விவசாயிகளிடையே பெரும்க் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது .

பாமக தலைவர் அன்புமணி அறிக்கை

எதையும் சாதிக்கும் திறன் கொண்ட இளைய தலைமுறையினரே வணக்கம்! கடந்த கால ஒப்பந்தங்கள் எதையும் மதிக்காமல் காவிரி மற்றும் துணை ஆறுகளின் குறுக்கே 4 அணைகளை கட்டிய கர்நாடகம், இப்போது நடுவர் மன்றத் தீர்ப்பை மதிக்காமல் மேகதாது அணையைக் கட்டத் துடிக்கிறது.

மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா வளமாக இருக்காது வறட்சியாக மாறும். வளமான டெல்டாவையும், 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரங்களையும் பாதுகாக்கவே ஜூலை 1 முதல் 4 வரை தமிழ்நாட்டில் காவிரி தொடங்கும் பிலிகுண்டுலு முதல் கடலில் கலக்கும் பூம்புகார் வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொள்கிறேன்.

மாற்றங்களை ஏற்படுத்தும் இளைஞர்களே.... இந்தப் பயணத்தில் என்னுடன் இணையுங்கள், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காப்போம்!

மேகேதாட்டு அணை கட்டுவதற்கு எதிராக லோகோ

மேகேதாடு அணை விவகாரத்தில் , அணை கட்டுவதற்கு எதிராக , பாகம தலைவர் அன்புமனி லோகோ வெளியிட்டு இந்த விவகாரத்திற்கு ஆதரவாக விழிப்புணர்வு நடைப்பயணத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்

மேகேதாட்டு விவகாரம் : தமிழக அரசு சார்பாக தீர்மானம் நிறைவேற்றம்

கர்நாடகா அரசு மேகேதாட்டில் அணை கட்டுவதற்கு ஏதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் முதலவர் விஜய் தலைமையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது . இத்தீர்மானத்திற்கு அனைத்து கட்சி தலைவர்களும் தீரமானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

===========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in