சட்டமன்றத்தில் அன்புமணி எம்எல்ஏக்கள் போராட்டம் : ஜி.கே. மணி வேதனை

PMK Party Legislative Committee Leader Issue : சட்டமன்ற பாமக குழுத் தலைவர் யார் என்பதில் ராமதாஸ், அன்புமணி தரப்பு மல்லுக்கட்டுவதால், தொண்டர்கள் விரக்தி அடைந்து இருக்கிறார்கள்.
Ramadoss and Anbumani factions fighting for PMK Party legislative Committee leader
Ramadoss and Anbumani factions fighting for PMK Party legislative Committee leader
2 min read

பாமகவில் அதிகார மோதல்

PMK Party Legislative Committee Leader Issue : பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் ஓயந்தபாடில்லை. கட்சியில் யாருக்கு உண்மையான அதிகாரம் என்பதில் தொடங்கிய பிரச்சினை, தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என நீண்டு, தற்போது சட்டசபைக்கு வந்து இருக்கிறது.

தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று தொடங்கியது. மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், கரூர் சம்பவத்திற்கு இரங்கல் தீர்மானம் வாசித்தும் அவை நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டது.

ராமதாஸ் vs அன்புமணி மோதல் :

பாமக சட்டமன்ற குழு தலைவராக இருப்பவர் அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணி(GK Mani). இவர், ராமதாஸ் ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார். அருள் எம்எல்ஏவும் ராமதாஸ் பக்கம் நிற்கிறார்.

அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்களான சிவகுமார் (மயிலம் தொகுதி), சதாசிவம் (மேட்டூர் தொகுதி), வெங்கடேஸ்வரன் (தருமபுரி தொகுதி) ஆகிய மூன்று பேரும் சட்டப் பேரவைக்கு செல்லும் 4வது நுழைவு வாயில் முன் அமர்ந்து, பாமக சட்டமன்றக் குழு தலைவர், துணைத் தலைவர், கொறாடாவாக தங்களை நியமிக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்(PMK MLA Protest on GK Mani in TN Assembly). இது தொடர்பாக சபாநாயகரிடம் கடிதம் அளித்து இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

பாமகவில் பிரிவு - வேதனை :

இந்தப்போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே. மணி, "சட்டப்பேரவையில் பாமக இரண்டு பிரிவுகளாக செயல்படுவது மிகவும் வருத்தமளிக்கும், அதிர்ச்சியான, ஒரு துரதிருஷ்டவமான சம்பவமாகப் பார்க்கிறோம். பாமகவை உருவாக்கியவர் ராமதாஸ். எந்தப் பதவியும் வகிக்காத ஒரு தலைவர் அவர். வன்னியர் சமூகம் உட்பட அனைத்து சமூக மக்களுக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக போராடுபவர் அவர்.

ராமதாஸ் காலத்தில் கட்சிக்கு சோதனை

அகில இந்திய அளிலும், தமிழக அளவிலும் ஆறு இட ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொடுத்த ஒரு தலைவர் ராமதாஸ். பாமகவை ஒரு வலிமையான சக்தியாகக் கொண்டு வந்தவர் அவர். அவருடைய காலத்தில் பாமகவுக்கு இப்படி ஒரு சோதனை வந்திருப்பது எங்களுக்கு அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

ஒற்றுமையே கட்சியை வலுப்படுத்தும்

அவருடன் 45 வருடங்களாக நான் பயணம் செய்கிறேன். அவர் போராடாத, குரல் கொடுக்காத பிரச்சினைகளே இல்லை. அப்படிப்பட்ட அவருக்கு, இப்படி ஒரு சோதனை வந்திருப்பது, துரதிருஷ்டவசமானது, வேதனையானது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிடில் நம் அனைவருக்கும் தாழ்வு, ஒற்றுமையே பலம். இது எல்லோருக்கும் பொருந்தும். அரசியல் கட்சிகளில் பிரச்சினைகள் வரும். எல்லா கட்சிகளிலும் பிரச்சினைகள் வரும். அது இயல்புதான். என்றாலும் கூட, ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே நல்ல விஷயம்.

மேலும் படிக்க : பாமக குழுத்தலைவர் யார்? : சட்டமன்றத்திலும் ராமதாஸ்-அன்புமணி மோதல்

ராமதாசுக்கே முழு அதிகாரம்

முழு அதிகாரம் கட்சியைத் தொடங்கிய ராமதாஸுக்குத்தான் உண்டு. அவரது நியமனம்தான் சரியானது என்பது எங்களது கருத்து. உண்மையும், தர்மமும், சத்தியமும், நியாயமும் அதுதான்.மக்களுக்காக போராடும் கட்சி தான் பாமக, தற்போது பாமகவுக்குள் போராட்டம் என்பது வினோதமானது, துரதிருஷ்டவசமானது” இவ்வாறு ஜி.கே. மணி தெரிவித்தார்.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in