
Ramadoss vs Anbumani Ramadoss Fight : பாமக நிறுவனர் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், பாமக நிர்வாகக் குழுக் கூட்டம் தைலாபுரத்தில் கடந்த வாரம் நடைபெற்றது.
நிர்வாக குழுவில் அன்புமணி கிடையாது :
அப்போது நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டார். ராமதாஸின் லெட்டர் பேடில் இருந்தும் அன்புமணியின்(Anbumani Ramadoss Removed) பெயர் நீக்கப்பட்டது. இதையடுத்து ஓமந்தூரில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அன்புமணியை விமர்சித்து பலரும் பேசியதோடு, அவரை கண்டித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
பாமகவில் ராமதாசுக்கே அதிகாரம் :
பாமக யாருடன் கூட்டணி உட்பட அனைத்து நிலையிலும் முடிவெடுக்கும் அதிகாரத்தை நிறுவனர் மற்றும் தலைவரான ராமதாசுக்கு(Ramadoss) வழங்குவது உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதனிடையே, பாமக தலைவர் பதவிக்காலம் கடந்த மே 28ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது.
இதையடுத்து பாமக சட்ட விதிகளின்படி தலைவராக ராமதாஸ் மறுநாள் (மே 29) பொறுப்பேற்றுக் கொண்டார். இதுதொடர்பான இந்திய தேர்தல் ஆணையத்துக்கு(Election Commission) பாமக முறைப்படி கடிதம் அனுப்பி உள்ளது.
தலைமை நிர்வாகக் குழு கூட்டம் மற்றும் மாநில செயற்குழுக் கூட்டத்தின் தீர்மான நகலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தீர்மானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கையொப்பமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொதுக்குழுவை கூட்டுகிறார் ராமதாஸ் :
தலைமை நிர்வாகக் குழு, செயற்குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தை கூட்டவும் ராமதாஸ் ஆயத்தமாகி வருகிறார்.
இக்கூட்டத்தில் செயல் தலைவர் பதவி மட்டும் இல்லாமல், கட்சியில் இருந்தே அன்புமணியை நீக்குவதற்கும் ராமதாஸ் தயங்கமாட்டார் என அவரது ஆதரவாளர்கள் அடித்துக் கூறுகின்றனர்.
தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் :
கட்சி தலைவர் பதவி தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் ராமதாஸ்(Ramadoss Letter) தரப்பில் முறைப்படி கடிதம் வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்பேரில் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவினை பொருத்தே அன்புமணியின் அரசியல் எதிர்காலம் தெரிய வரும்.
முதலில் நிர்வாகக் குழு பின்னர் செயற்குழு, அடுத்து பொதுக்குழு என ராமதாஸ் திட்டமிட்டு காய் நகர்த்தி வருவதால், அவருக்கு வெற்றி என்கின்றனர் ஆதரவாளர்கள்.
======