ராமதாஸ் வாழ்க்கை வரலாறு ‘அய்யா’ : திரைப்படமாக எடுக்கிறார் சேரன்

PMK Founder Ramadoss Biography Movie Ayya : பாமக நிறுவனர் ராமதாசின் வாழ்க்கை வரலாறு ‘அய்யா’ என்ற பெயரில் திரைப்படமாகிறது.
PMK Founder Ramadoss Biography Movie Ayya Announcement
PMK Founder Ramadoss Biography Movie Ayya Announcement
1 min read

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் :

PMK Founder Ramadoss Biography Movie Ayya : பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனராக இருந்து அக்கட்சியை வழி நடத்தி வருபவர் டாக்டர் ராமதாஸ். இட ஒதுக்கீடு, மது ஒழிப்பு, விவசாயிகள் நலன் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக இவர் நடத்திய போராட்டங்கள் எண்ணற்றவை. தற்போது, பாமக தலைவராகவும் கட்சியை கொண்டு செல்கிறார் ராமதாஸ்.

திரைப்படமாகும் ராமதாசின் வாழ்க்கை வரலாறு :

ராமதாஸ் அவர்களின் பிறந்த நாள்(Ramadoss Birthday) இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தினை பாட்டாளி மக்கள் கட்சியின்(Pattali Makkal Katchi) முன்னாள் தலைவரும் தற்போது கௌரவத் தலைவராக ஜி.கே.மணியின் மகன் தமிழ் குமரன் தயாரிக்கிறார். பிரபல இயக்குநர் சேரன்(Director Cheran) படத்தினை இயக்கவுள்ளார். இதன் ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம் பணிபுரியவுள்ளார்.

ராமதாஸ் ஆற்றிய சேவைகள் :

இந்த பயோபிக்கில் ராமதாசாக நடிகர் ஆரி(Aari Arujunan) ஒப்பந்தமாகி இருக்கிறார். அவரை வைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து போஸ்டர்களை உருவாக்கி வெளியிட்டுள்ளது படக்குழு. தொடக்க காலத்தில் குறைந்த விலைக்கு மருத்துவம் பார்த்த நாட்கள், அதன் பிறகு கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்தித்து பிரசாரம், கட்சி தொடக்கம், கட்சியின் வளர்ச்சி, அதற்கான ராமதாசின் பங்களிப்பு என பல்வேறு விஷயங்களை அய்யா(Ayya Movie) படத்தில் படமாக்க உள்ளனர்.

ராமதாஸ் வாழ்க்கை, “அய்யா” திரைப்படம் :

‘அய்யா’(Ayya Movie First Look Poster) எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டர்களில் ‘இன விடுதலைக்கான போராட்டத்தின் வரலாறு’ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் - அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டமாக இருக்கும் நிலையில், ’அய்யா’ வாழ்க்கை வரலாறு படம் உருவாவது குறிப்பிடத்தக்கது.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in