குரூப்-2, 2ஏ காலியிடங்களை 3,000 ஆக உயர்த்த வேண்டும் : தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்...

அரசு காலி பணியிடங்களை உயர்த்துமாறு தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் ...
Good News for Group 2 & 2A Aspirants? Anbumani Urges Government to Increase Vacancies to 3,000
Good News for Group 2 & 2A Aspirants? Anbumani Urges Government to Increase Vacancies to 3,000Ai- Generated
1 min read

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் காலிபணியிடங்களை உயர்த்த அன்புமணி ராமதாஸ் கோரிக்கை :

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி  அரசு தேர்வுகளுக்கான காலிப்பணியிடங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது அதில் வெறும் சொற்ப அளவிலே ,அதாவது 821 இடங்களுக்கான அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது .

இதனால் அந்த தேர்வை எதிர்பார்த்து காத்திருந்த மாணவர்கள் மற்றும் அரசு தேர்வில் ஆர்வமுடையோருக்கு இது பெரிய ஏமாற்றமாக இருந்தது .எனவே கடந்த ஆட்சியை போல இந்த விஜய் தவெக அரசும் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதாக அன்புமணி தெரிவித்திருக்கிறார்

கடந்த ஆட்சியில் வெளியிட்ட எண்ணிக்கை :

திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் வெறும் 645 காலியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில், அது மக்களிடத்தில் அந்த சமயத்தில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது .

அதேபோல இந்த ஆண்டும் பொறுப்பேற்று இருக்கக்கூடிய தவெக அரசு வெறும் 821 காலி பணியிடங்கள் மட்டுமே வெளியிட்டு இருப்பது பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது .

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 176 கூடுதல் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தவெக அளித்த வாக்குறுதிகள் :

2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசுத் துறைகளில் இன்றைய நிலையில் 6 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வைத்துக் கொண்டால், அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந்தது 2 லட்சம் பணியிடங்கள் காலியாகக் கூடும்.

எப்போது நிறைவேற்றுவீர்கள்

அவற்றையும் சேர்த்தால் புதிய அரசு ஐந்தாண்டுகளில் 8 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டியிருக்கும். அதற்கான ஆண்டுக்கு 1.50 லட்சம் பேருக்காவது அரசு வேலைகள் வழங்கப்பட வேண்டும். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அதேபோல வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4000 உதவித் தொகை வழங்கப்படும்; தனியார் தொழில் வணிக நிறுவனங்களில் 75% வேலைகள் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யும் சட்டம் இயற்றப்படும் என்பன தான்.

இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பது இளைஞர்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம் ஆகும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

logo
Thamizh Alai
www.thamizhalai.in