தூய்மை பணியாளர்கள் போராட்டம் :
சென்னை மாநகராட்சி மண்டலம் 5 மற்றும் 6வது பகுதிகளுக்கான தூய்மைப் பணிகள் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்தும், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இரண்டு மண்டலங்களில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
13 நாட்களாக தொடர் போராட்டம் :
ஆகஸ்டு 1ம் தேதி தொடங்கிய இவர்கள் போராட்டம், 13வது நாளாக நேற்றும் நீடித்தது. ரிப்பன் மாளிகை முன்பு நடைபெற்று வந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தின. பணி நிரந்தரம் என்ற கோரிக்கையில் தொழிலாளர்கள் உறுதியாக நின்றனர். பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நள்ளிரவில் தூய்மை பணியாளர்கள் கைது :
இதைத் தொடர்ந்து நேற்று காலை முதலே போராட்டம் நடைபெற்று வந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
புதன்கிழமை இரவு இந்த கைது நடவடிக்கையை போலீஸார் மேற்கொண்டனர். நேற்று நள்ளிரவு போராட்டக்காரர்களை கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டது.
தேசியக் கொடியுடன் போராட்டம் :
கையில் தேசியக் கொடியுடன் போராட்ட களத்தில் இருந்தவர்களை
குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பேருந்துகளில் ஏற்றி அழைத்து செல்லப்பட்டனர். பெண் தூய்மை பணியாளர்களை பெண் காவலர்கள் கைது செய்தனர்.
கைது நடவடிக்கை, பரபரப்பு :
முன்னதாக, ரிப்பன் மாளிகை பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்த கைது நடவடிக்கையின் போது அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
=====
ஆகஸ்டு 1ம் தேதி தொடங்கிய இவர்கள் போராட்டம், 13வது நாளாக நேற்றும் நீடித்தது. ரிப்பன் மாளிகை முன்பு நடைபெற்று வந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தின. பணி நிரந்தரம் என்ற கோரிக்கையில் தொழிலாளர்கள் உறுதியாக நின்றனர். பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நள்ளிரவில் தூய்மை பணியாளர்கள் கைது :
இதைத் தொடர்ந்து நேற்று காலை முதலே போராட்டம் நடைபெற்று வந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
புதன்கிழமை இரவு இந்த கைது நடவடிக்கையை போலீஸார் மேற்கொண்டனர். நேற்று நள்ளிரவு போராட்டக்காரர்களை கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டது.
தேசியக் கொடியுடன் போராட்டம் :
கையில் தேசியக் கொடியுடன் போராட்ட களத்தில் இருந்தவர்களை
குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பேருந்துகளில் ஏற்றி அழைத்து செல்லப்பட்டனர்.
பெண் தூய்மை பணியாளர்களை பெண் காவலர்கள் கைது செய்தனர்.