

காவிரி போராட்டம் - உதயநிதி பேச்சு
காவிரி நீர் தொடர்பாக கர்நாடக அரசு கண்டித்து திமுக சார்பாக தஞ்சையில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் திமுக இளைஞர் அணி செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான உதயநிதி, நடிகை திரிஷா தொடர்பாக பேசிய கருத்து சரச்சையை ஏற்படுத்தியது.
தவெக அளித்த புகார்
இது தொடர்பாக தவெக மகளிர் அணி நிர்வாகி பைரவி புகார் கொடுத்தார்.
காவிரி பிரச்சினை பற்றி பேச ஆரம்பித்தவர் முதலமைச்சர் பற்றி மிக கேவலமாகவும் அநாகரிகமாகவும் பேசவே நா கூசுகின்ற வகையில் வார்த்தைகளை ஆபாசமான வார்த்தைகளை, தரமற்ற வார்த்தைகளை பேசியிருக்கிறார்.
மொத்தம் 42 டிஎம்சி தண்ணீர் நமக்கு வந்திருக்கணும் ஆனா இன்னைக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரல ஆனா இத பத்தி இங்க இருக்கக்கூடிய முதலமைச்சர் வாயை திறந்து பேசறாரா? பேச மாட்டேங்கிறார் அவருக்கு இருக்கக்கூடிய ஒரே கவலை என்ன?" என்று அவர் கூறும் போது கூட்டத்தில் இருந்தவர்களிடமிருந்து ”த்ரிஷா த்ரிஷா' என குரல் எழுப்பினர்.
மீண்டும் 'த்ரிஷா த்ரிஷா எனும் சத்தம் அங்கு கூடியுருந்தவர்களிடமிருந்து அதிகரிக்கவே அந்த சத்தமிட்டவர்களை நோக்கி அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக உதயநிதி சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்தார்.
பெண்களை களங்கப்படுத்தி இருக்கிறார்
இவர்களின் இந்த செயலானது வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்பட்டதாக தெரிகிறது இவ்வாறு முதலமைச்சர் அவர்களை உதயநிதி அவர்கள் குறிப்பிட்டு பேசுகையில், நடிகை த்ரிஷா அவர்களை கொச்சைப்படுத்தும் விதமாகவும் பெண்மையை களங்கப்படுத்தி மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவும் பேசியுள்ளார்.
உதயநிதி மீது நடவடிக்கை தேவை
அநாகரிகமான செயலைத் தெரிந்துகொண்டு ஏராளமான பெண்கள் என்னிடம் வந்து உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவருடன் அருவருக்கதக்க வகையில் பேசியது மற்றும் நடந்துகொண்டது என்னை போல அவர்களுடைய மனதையும் ஆழமாக புண்படுத்தியுள்ளதாகவும், அதற்கு உடனடியாக சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரிய கலவரத்தை ஏற்படுத்தும் எனவும் கொந்தளித்தனர். எனவே இது தொடர்பாக சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இழிவான சர்ச்சை பேச்சு
காவிரி நதிநீர் விவசாயிகள் பிரச்சனை எனும் பெயரில் பெயருக்கு ஒரு ஆர்பாட்டத்தை அறிவித்துவிட்டுஅதனை தவிர்த்து சபை நாகரிகமின்றி பொதுவெளியில் தவெக அரசை இழிவு படுத்துவதாக ஒட்டுமொத்த பெண் சமுதாயத்தையும் இழுவுபடுத்தி ஆபாசமாகப் பேசி அந்த ஆபாசம் கலந்த விடியோவை திமுக ஐடி விங் ன் எக்ஸ் தளத்தில் விடியோவாக வைரலானது.
பொது அமைதிக்கு பாதிப்பு
இதனால், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய குற்ற செயல்களில் ஈடுபட்ட மேற்படி திமுக இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின்,திமுக ஐடி விங் பொறுப்பாளர்கள் மற்றும் மேற்கண்ட அறுவருப்பான நிகழ்வை குற்றமுறு நோக்கத்துடன் கூட்டுசதி செய்து திட்டமிட்டு செயல்படுத்திய அனைவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி இப்புகார் மனுவை அளிக்கிறேன் என அந்த புகாரில் பைரவி தெரிவித்துள்ளார்.
==================